பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நாடகக் கலை அசங்க காலத்தில் கூத்து என்னும் சொல் முதலில் கடனத்தையும், பின்பு கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே, கடனத்தையும் நாடகத் தையும் கூத்தர் என்போர் பேணி வளர்த்தனர். கடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர். உள்ளக் குறிப்புப் புறத்தில் தோன்றும்படி திறம்பட நடிப்பவள் விறலி' எனப்பட்டாள். கூத்தி, கூத்தர் ஆகிய இவர்கள் கதை தழுவி வரும் கூத்துக்களே ஆடினர். அங்ங்னம் ஆடிய பொழுது, ஆண் மகன் பொருகன் என்றும் பெயர் பெற்ருன். தமிழ் தொன்றுதொட்டு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளேப் பெற்றிருந்தது. சிலப்பதிகாரம் ஒன்றே இன்று நாடகக் காப்பியமாக இருந்து வருகிறது. சிலப் பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட்டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது. அக்காலத்தில் நாடகம் என்னும் சொல், கூத்து என்னும் சொல் போன்றே நடனத் தையும், கதை தழுவி வரும் கூத்தையும் குறித்தது. "நாடகக் காப்பிய கன்னுரல்' என வரும் தொடரில் உள்ள 'காடகம் என்னும் சொல்லுக்குக் 'கதை தழுவி வரும் கூத்து' என்று பொருள் எழுதியிருத்தல் கவனிக்கத் தக்கது. எனவே, நாடகம் பற்றிய காவியங்கள் மணிமேகலை 1. திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள விறலி மலே என்பது இன்று தவருக விருலிமலே என வழங்குகிறது.