பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தமிழகக் கலைகள் ஆசிரியர் காலமாகிய கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் இருந்தன. என்பது தெளிவு. மணிமேகலைக்கு முற்பட்ட திருக் குறளிலும் 'கூத்தாட்டவை' குறிக்கப்பட்டுள்ளது. இங்குக் கூத்தாடுதல் என்பது நடித்தல் என்னும் பொருளில் வ5துளளது. - கூத்து அல்லது நாடகம் என்பது நுண்கலைகளுள் ஒன்ருகும். வெளிநாடுகளுடன் பன்னெடுங் காலமாக வாணிகம் செய்துவந்த தமிழர்-இயல், இசைக் கலைகளில் வல்லவராயிருந்த தமிழர்-நாடகக் கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று கொள்ளுதல் தவருகாது. இயல், இசை என்னும் இரண்டு பிரிவுகள் கேட்போருக்கு இன்பம் தருவன. நாடகம் கேள்வி இன்பத்தோடு, காட்சியின்பமும் பயப்பதாகும். எனவே, நாடகமே மிக்க பயனுள்ளதாக அறிவுடையோர் கருதுவர். நாடகத்தில் இயல், இசை ஆகிய இரண்டும் கலந்துள்ளன. நாடகத் திலேயே முத்தமிழையும் ஒருங்கே காணலாம். கோவில் விழாக்களிலேயே நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக முதலில் நாடகம் அமைந்திருந்தது. பின்பு, பாட்டாலமைந்த உரைநடை இடையிடையே கலந்தது. அதன் பிறகு பேச்சு நடை யிலமைந்த உரைநடை சேர்ந்தது. எனவே, ஆடல், பாடல் வடிவில் அமைந்த உரைநடை, பேச்சு உரைநடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன. இங்ங்னம் வளரத் தலைப்பட்ட நாடகம், அரசர்க்கு என்றும், பொதுமக் களுக்கு என்றும் இருவகையாகப் பிரிந்தது. அவை, 'வேத்தியல், 'பொதுவியல்' எனப்பட்டன. நாடகம் நன்முறையில் வளர்ந்துவந்த பொழுது, இங்காட்டில் வந்து தங்கிச் செல்வாக்குப் பெற்ற