பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கலை 9 to ஆரியரும், சமணரும் நாடகம் காமத்தை மிகுதிப் படுத்துவதென்று தவருக எண்ணினர்; அதனல், தாம் செய்த நூல்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர்; அவர்கள் செல்வாக்கு மிகுதிப்பட்டிருந்த காலத்தில், காடகத் தமிழை வளரவொட்டாமல் தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்படியாகக் குறைந்தது.” பல்லவர் காலத்தில் கி. பி. 7-ஆம் நூற்றண்டில் பல்லவ மகேந்திர வர்மன், மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வேடிக்கை. நாடகத்தை வடமொழியில் எழுதினன்." மேலும், வட மொழியில் சிறு நாடகங்கள் சில இராசசிம்ம பல்லவன் காலத்தில் செய்யப்பட்டன. பக்தி இயக்கம் பரவத். தொடங்கிய அக்காலத்தில் சமயத் தொடர்பான நாட கங்கள் தலைதுாக்கின என்பது தெரிகிறது. கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் செய்யப் பெற்ற உதயணன் வரலாற்றைக் கூறும் பெருங்கதை'யிலும் நாடகத்தைப் பற்றிய செய்தி' கள் சில காணப்படுகின்றன. “நயத்திறம் பொருந்த நாடகம் கண்டும்' 'நண்புணத் தெளித்த நாடகம் போல' “வாயிற் கூத்தும் சேரிப் பாடலும் கோயில் நாடகக் குழுக்களும் வருகென' 'கோயில் நாடகக்குழு - அரண்மனையில் நடிப்போர் கூட்டம்' எனவரும் பதிப்பாசிரியர் அடிக்குறிப்புக் காணத்தகும். கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் தமிழகத்தில் நாடகம் நடிக்கப்பட்டதையும், நாடகக் குழுவினர் இருக்க மையையும் இவ்வரிகள் தெரிவிக்கின்றன அல்லவா? - 2. வி. கோ. சூ., தமிழ்மொழியின் வரலாறு, பக். 45. 3. பல்லவர் வரலாறு, பக் 109. 4. பல்லவர் வரலாறு, பக். 165.