பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:92 தமிழகக் கலைகள் கி. பி. 9-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகர் தமது திருவாசகத்தில், 'நாடகத்தால் உன்னடி யார் போல் நடித்து' என்று கூறியிருத்தலாலும், நம்மாழ் வார், “பிறவிமா மாயக் கூத்தினேயே’ என்று கூறியிருத்த லாலும், கி. பி. 9-ஆம் நூற்ருண்டில் நாடகங்கள் கடித்துக் காட்டப்பட்டன என்பதை நன்கறியலாம். சோழர் காலத்தில் கி. பி. 10-ஆம் நூற்ருண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது காணத்தகும் : . "இளைமையங் கழனிச் சாயம் ஏறுழு தெரிபொன் வேலி வளமுயங் குருவ மென்ருேள் வரம்புபோய் வனப்பு வித்திக் கிளைகரம்(பு) இசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம விளைபயன் இனிதின் துய்த்து வீணைவேந்(து) - - உறையு மாதோ.' (செ. 2398) 'நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைத் தோண்டி :யும்.........இவ்வாறு பிறரை ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும் நுகர்ச்சியைக் கைவிட்டேம்' என வரும் தொடர், சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்ட வல்லது. - - - 'நாடகம் நயந்து காண்பார் கலங்கிளர் கண்கள் சூன்றும்' - -முத்தி இலம்பகம், 2989