பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கலை 93. இவற்ருல், சிந்தாமணி எழுதப்பெற்ற கி. பி. 10-ஆம் நூற்ருண்டில் நாடகங்கள் தமிழ்நாட்டில் நடிக்கப் பெற்றன என்னும் உண்மையை உணரலாம். பிற்காலச் சோழர் காலத்தில் ஆண்டுதோறும் வைகாசி விழாவில் தஞ்சை இராசராசேசுவரத்தில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. அதனை நடித்துக் காட்டிய விசயராசேந்திர ஆச்சாரியனுக்கு ஆண்டுதோறும் 130 கலம் நெல் தரப்பட்டது." இராச ராசன் தஞ்சாவூரில் பெரிய கோவிலைக் கட்டிய முறை, அவனது வரலாறு, அவன் மனேவியர் அக்கோவிலுக்கு அளித்த சிவந்தங்கள், அக்கோவிலப் பற்றிக் கருவூர்த் தேவர் பாடியது போன்ற பல செய்திகள் இந் நாடகத்தில் பல காட்சிகளாக அமைந்திருக்கலாம். விக்கிரமாதித்த ஆச்சாரியன் என்ற இராசராச நாடகப்பிரியன் என்பவன் பந்தணே நல்லூரில் கட்டுவப் பங்கு, மெய்ம்மட்டிப்பங்கு (நாடகக்காணி) இவற்றைப் பெற்றவய்ை இருந்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுவதால், இராசராச நாடகம் (முதலாம் இராசராசனைப் பற்றியது) என ஒன்று இருந்தது, அந் நாடகம் நடிக்கப் பட்டது என்பவற்றை அறியலாம்." இந்நூலில் இராசராச னுடைய இளமைப் பருவம், அவன் அரசனைமை, போர்ச் செய்திகள், ஆட்சிமுறை, இராசராசேசுவரம் எடுப்பித் தமை, நம்பியைக் கொண்டு திருமுறைகள் தொகுத்தமை முதலிய செய்திகள் பல காட்சிகளாக இடம் பெற்றிருக்க லாம். ...’ - - முதற் குலோத்துங்கன் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒன்று செய்யப்பட்டது. அதனைச் செய்தவனுக்குப் பரிசு தரப்பட்டது. அது திருப்பாதிரிப் புலியூரைப் 5. S. I. I. II. 67. . 6. தமிழ்ப்பொழில், 23, பக் 152-3. 7. 129 of 1902. .