பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கலை 35 திர்கூடராசப்பக் கவிராயர் செய்த குற்ருல்க் குறவஞ்சி என்பன இக்கூத்து நூலின்பாற்படுவனவாம். முக்கூடற் பள்ளு,பருளை விநாயகர் பள்ளு முதலியனவும் கூத்து நூல்கள்ே யாம். இவை எல்லாம் இயற்றமிழ்ப் புலமை சான்ற பாவலர் இயற்றியனவாம். சுத்தானந்தப் பிரகாசம் என்ற தொரு பரத நூல் இடைக்காலத்தின் தொடக்கத்தில் ஏற்பட்டது; வெளிப்படாமலிருக்கின்றது. பின்பு, கி. பி. 18-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் இருந்த அரபத்த காவலர் என்பார் பரத சாஸ்திரம் என்றதொரு நூல் செப் துள்ளார். 8 கி. பி.19-ஆம் நூற்றண்டின் முற்பாதியில் கொட்டை ஆர்ச் சிவக்கொழுந்து தேகிகர் தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னர்மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப்பிடத்தக்கது. அந்நாடகம் தஞ்சைப் பெரிய கோவிலில் கடிக்கப்பட்டு வன்தது. அதே நூற்ருன்டின் கடைப்பகுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாடிய மனேன்மணிய நாடகமும் போற்றத்தக்கதுவே. - இருபதாம் நூற்ருண்டில் w நாம் வாழும் இவ்விருபதாம் நூற்ருண்டின் முற்பாதி யில் நாடகக்கலே நன்குவளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதியுள்ள பல நாடகங்கள் காடெங்கும் நடிக்கப்பட்டன. சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதாசு சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் பலவாகும். அவற்றுள், அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிரபுலிங்க லீலை, வள்ளி திருமணம், பாதுகா பட்டாபிஷேகம், இலங்கா தகனம், அல்லியர்ச்சு,ை சிறுத்தொண்டர், சதி அனுகுயா, பவளக்கொடி, மணிமேகலை, மிருச்சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவலன், பிரகலாதன் என்பன குறிக்கத் 8. வி.கோ.சூ, தமிழ்மொழியின் வரலாறு, பக். 46.47.