பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழகக் கலைகள் நந்திவர்மன் வரலாற்றுப் புகழ்பெற்றவன்; சிறந்த போர் வீரன்; மிகச்சிறந்த சிவபக்தன்; கந்திக்கலம்பகம் பாடப் பெற்றவன். அப்பெருமகனைப்பற்றிய நாடகம் மிகவும் நன்முறையில் நடிக்கப்பெற்றது. இதுகாறும் கூறப்பெற்ற நாடகக் குழுவினரேயல்லா மல், அரசாங்க அலுவல்களிலும், பிற துறைகளிலும் வேலை பார்ப்பவர் பேரூர்களில் எல்லாம் சபைகளே அமைத்து நாடகங்களே நடித்து வருகின்றனர். இது பொதுமக்களிடம் எந்த அளவு நாடகப் பற்றுள்ளது என்பதை கன்கு உணர்த்துகிறது. மத்திய அரசாங்கம் சகஸ்ரநாமம என்ற நடிகர் பொறுப்பில் நடிகர்க்குரிய நடிகர் பயிற்சிப்பள்ளி ஒன்றைச் சென்னையில் தொடங்கியுள்ளது. அரசாங்கம் நாடகக் கலை வளர்ச்சியில் நல்லார்வம் காட்டத் தொடங்கியிருக் கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். கம் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், இக்கலை வள்ர்ச்சிக்கு வகுப்பு நடத்தவும், அதனில் தேறியவர்க்குப் பட்டம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுரை . . . . ... . . . . . .” தமிழ் நடிகர் தமிழகத்து வரலாற்றையும் இலக்கியத் தையும் பயிலுதல் நல்லது. தாய, எளிய தமிழ்நடையில், உரையாடல்களே அமைத்து நடித்தல் வரவேற்கத்தக்கது. பாடல்கள் சிலவாகவும் உரையாடல்கள் பலவாகவும் அமைந்துள்ள நாடகங்களேயே நடித்தல் ஏற்புடையது. பொருத்தமற்ற இடங்களில் எல்லாம் பாடுதல் நாடகச் சுவையைக் கெடுத்துவிடும். இவை அனைத்திற்கும் மேலாக நடிகரிடம் கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகுந்திருத்தல் வேண்டும். வருங்காலத் தமிழகத்தில் பட்டம்பெற்ற