பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கலை 99 இளைஞர்களும் இக்கலையில் பயிற்சி பெறுதல் நல்லது. கற்றவர் நாடகத்தில் நடிப்பது வரவேற்கத்தக்கது. தமிழுணர்ச்சி வீறு கொண்டுள்ள இக்காலத்தில், தமிழ் நடிகர் நாடகக்கலை வளர்ச்சியில் ஊக்கம் கொள்ளுதல் நல்லது. நன்முறையில் அமையும் நாடகங்களைத் தமிழ் மக்கள் எப்பொழுதும் வரவேற்பர் என்பது திண்ணம். வானெலியிலும் நாடகங்கள் அவ்வப்போது ஒலிபரப் பப்படுகின்றன. இக்கால உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாடக மன்றங்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் சார்பில் இளைஞர்கள் நடிப்புத்திறமை பெற்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மாணவரோடு ஆசிரியரும் ஒரோ வழி நடித்தல் பாராட்டத் தகுவதாம். -