பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- • 尊 - - 9. மருத்துவக் கலை சங்க காலத்தில் சங்க காலத்தில் மருத்துவக் கலையைப் பற்றிய விவரங்களை அறியத்தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. ஆயினும் மருத்துவன் தாமோதரனர் என்ற புலவர் ஒருவர் அக்காலத்தில் இருந்தார் என்பதை அவர் பாடல் கொண்டு அறிகின்ருேம். அவரது 'மருத்துவன்' என்ற பட்டத்தினுல், மருந்துகள் உண்மையும் மருத்துவக்கலேயி ல் தாமோதரனர் பண்பட்டவர் என்பதையும் நாம் அறிதல் கூடும். திருக்குறளில் மருந்து' என்னும் அதிகாரம் இருப்பதை நோக்க, அக்காலத்தில் மருத்துவக்கலே தமிழகத்தில் பரவியிருந்தது என்பதும் மருத்துவர் பலர் இருந்தனர் என்பதும் தெளியலாம். பண்ணன் பசிப்பிணி மருத்துவன் என்ற பெயர் பெற்ருன். இத்தொடர் நோய் நீக்கும் மருத்துவன் உண்மையைப் புலப்படுத்துகின்றது. திருக்குறளில் மருத்துவம் 'ஒருவன் உடலுக்கு ஒத்தபடி உணவும் செயல்களும் இருத்தல் வேண்டும். இவை ஒவ்வாது மிகுதிப்படினும் அல்லது குறையினும் வாதம், பித்தம், ஐ என்னும் மூன்று நோயும் அவனுக்குத் துன்பம் செய்யும் என்று மருத்துவ நூலோர் கூறியுள்ளனர். ஒருவன் தான் உண்டது செரித்துவிட்டது என்பதை நன்கு அறிந்த பின்பே உண்ண வேண்டும். இங்கினம் செய்பவனுக்கு மருந் தென்று ஒன்று தேவையில்லே. ஒருவன் தனக்குச் செரிக்கத்தக்க அளவறிந்தே உண்ணவேண்டும். இங்ங்னம்