பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழகக் கலைகள் ஒருவர் உடல் நோயை மாற்றி இன்பம் புரியும். அவை போலவே மும்மூன்று திேப்பொருள்களேக் கொண்ட நூறு பாடல்களைக் கொண்ட நூலுக்கு திரிகடுகம்' என்று பெயரிட்டனர். - - - - - - - மருத்துவநூலிற் கூறப்பட்ட கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணைவேர், சிறுமல்லிவேர், நெருஞ்சிவேர், பெருமல்லி வேர் ஆகிய பஞ்ச மூலங்கள் மக்கள் பிணிகளைத் தீர்க்கும். அவைபோல ஐந்தைந்து நீதிப்பொருள்களைக் கொண்ட நூறு செய்யுட்களாலாகிய நூலுக்குச் சிறுபஞ்ச மூலம்’ என்ற பெயரை நம் முன்னேர் வழங்கியுள்ளனர். .. ஏலம், இலவங்கம், சிறு நாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்ற ஆறு மருந்துப் பொருள்களும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு வராகன் எடை கலந்த பொடி (சூரணம்) ஏலாதி எனப்படும். இம்மருந்தைப் போலவே உளநோயைத்தவிர்க்க அவ்வாறு பொருள் களேக்கொண்ட எண்பது செய்யுட்களை உடைய நூல் 'ஏலாதி எனப்பட்டது. - இவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மூன்ருகும். இவ்வாறு மருந்து வகைகளின் பெயர்களையே நூற்பெயர் களாக நம் முன்னேர் வைத்து வழங்கினர் என்பதை நோக்க, அவர்தம் மருத்துவ அறிவை என்னென்று கூறி வியப்பது வடமொழியாளர் தமிழகத்தில் வாழத் தொடங்கியது முதல் அவர்களது ஆயுர்வேத மருத்துவ முறை தமிழகத்தில் கால் கொண்டது. பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகளில் மருத்துவம் பற்றிய செய்திகள் வருகின்றன. கண்ணப்பர் சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து வடிந்த குருதியை நிறுத்தப் பச்சிலைகளைப் பிழிந்து அவற்றின் சாற்றைப் பயன்படுத் திர்ை என்று வரலாறு கூறுகின்றது. கண்ணப்பர், மின்