பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவக் கல 103 செய்வார் பகழிப்புண்கள் தீர்க்குமெய் மருந்து தேடி"ச் சென்ருர் ; . " புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் - - வைத்த மனத்தினுங் கடிது வந்தம் மருந்துகள் பிழிந்து வார்த் - தார்' என்பது கண்ணப்ப நாயனர் புராணம். கொல்லி மழவன் மகள் முயலகன் என்ற நோயால் வருந்திள்ை. மருத்துவர் பலர் அவளது நோயைத் தீர்க்க முயன்றனர்; பயனில்லை. இறுதியில் ஞானசம்பந்தர் பதிகம் பாடி அந்நோயை அகற்றினர் என்பது வரலாறு." திருநாவுக்கரசருக்குக் கொடிய சூலைநோய் வந்த பொழுது, சமண முனிவர் நீரை மந்திரித்துக் குடிக்கக் கொடுத்தனர்; மயிற் பீலியால் உடம்பைத் தடவினர்." இங்ங்னம் மருத்துவத்தில் மந்திரித்த நீரைக் குடிப்பித்தலும் மயிற்பீலியால் உடம்பைத் தடவுதலும் இன்றும் உள்ள வழக்கேயாம். கி. பி. 7-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த கின்றசீர் நெடு மாறன் என்ற பாண்டியனுக்கு வெப்பு நோய் கண்டது. உடனே மதுரையில் இருந்த மருத்துவர் பலர் தாம் கற்ற மருத்துவ நூல்களின்படி வெப்பு நோய்க்குரிய மருந்து களைக் கொடுத்தனர் என்று பெரியபுராணம் பேசுகிறது. “மருத்துவ நூலவர் தங்கள்பல்கலைகளில் வகுத்த திருத்த குந்தொழில் யாவையும் செய்தனர்... ...' 1. கண்ணப்பர் புராணம், செ. 175-176. 2. சம்பந்தர் புராணம், செ. 311-320. 3. திருநாவுக்கரசர் புராண்ம், செ. 53. 4. சம்பந்தர் புராணம், செ. 713.