பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t{}4 தமிழகக் கலைகள் சோழர் காலத்தில் பிற்காலச்சோழர் காலத்தில் சேக்கிழார் பிறந்த குன்றத்தாரில் ஒரு மருத்துவன் இருந்தான் என்று கல்வெட் டுக் கூறுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் மருந்து விவரங்களைக் குறிக் கின்ருர். இக்குறிப்பு, பல்லவர் கால மருந்து வகைகளும் மருந்து முறைகளும் தொடர்ந்து சோழர் காலத்திலும் இருந்தன என்பதை உணர்த்துவதாகும். சில கோவில்களே அடுத்து மருத்துவமனைகள் இருந்தன. அவற்றில் இருவகை மருத்துவர் இருந்தனர். அவருள் ஒருவர் கைநாடி பார்த்து மருந்து கொடுப்பவர்(Physician), மற்ருெருவர் கட்டி முதலியவற்றை அறுத்துப் புண்களே ஆறவைப்பவர். அவர் 'சல்லியக்கிரியை பண்ணுவான்' (Surgeon) எனப்பட்டார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் வேர்களையும் பச்சிலைகளேயும் கொண்டு வருவோர், அவற்றை மருந்தாக்குவோர், நோயாளிகளைக் கவனிக்கும் தாதிமார் என்பவர் இருந்தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சோழர் காலப் பேரிலக்கியங்களான சிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய நூல்களிலும் மருந்துகளைப்பற்றி யும் மருத்துவர்களைப் பற்றியும் சில விவரங்கள் காணப்படு கின்றன. வேர்களையும், பச்சிலைகளையும் பயன்படுத்தும் முறை தமிழர்க்கே உரிய சித்த மருத்துவ முறையாகும். பிற்காலத்தில் நாவிதரும் அறுவை வேலையில் ஈடுபட் டிருந்தனர். அவர்கள் மருத்துவர் எனப்பட்டனர். பிள்ளைப் பேற்றுத் துறையில் நாவிதர் மனைவிமார் ஈடுபட்டிருந் தனர். நாவிதன் மனைவி மருத்துவச்சி எனப்பட்டாள். கி. பி. 18 அல்லது 14-ஆம் நூற்ருண்டினர் என்று கருதப்படுபவர் பரிமேலழகர். இவர் திருக்குறள், பரிபாடல்