பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவக் கலை 105 இவற்றுக்கு உரையெழுதியவர். இவர் திருக்குறளுக்கு எழுதியவுரை இவரது பல கலை அறிவை நன்கு வெளிப் படுத்துகிறது. இப்பெரியார் திருக்குறளில் உள்ள மருந்து' எனும் அதிகாரத்திற்குத் திறம்பட உரை வகுத்துள்ளார். இவர் காலத்தில் மருத்துவக்கலே நாட்டில் கன்னிலையில் இருந்ததை நாம் இதிலிருந்து நன்கறியலாம். இவர் கூறி யுள்ள செய்திகளைக் காண்க : “பழைய வினேயாலும் காரணங்களாலும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும். அவற்றுள் பழவினையால் சிருவன், அது முடியும்போது அல்லது திரா. ஆதலால் பழவினை நோய்களை ஒழித்து, பிற காரணங்களால் வரும் நோய்களை ஒழிக்கும் மருந்தின் திறம் கூறுகின்ருர். உணவு, செயல்கள் ஒவ்வாமையால் பிணிகள் தோன்றும்... வாதப்பகுதி, பித்தப்பகுதி, ஐப்பகுதி என்பன மூன்று. உணவு சுவையாலும், வீரியங்களாலும், அளவாலும் பொருந்த வேண்டும். மனம், மொழி, மெய்களால் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே நிறுத்திவிட வேண்டும். இவை இரண்டும் அளவோடு இல்லாமல் மிகுதல், குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையில் கில் லாவாய் வருந்தும். இவற்ருல், உடம்பிற்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதும், அவை துன்பம் செய்வதற்குக் காரணம் இருவகைத்து என்பதும் கூறப்பட்டன. “உணவு செரித்ததுக்குரிய குறிகளாவன யாக்கை நொய்ம்மை, கரணங்கள் தொழிற்கு உரியவாதல், பசி மிகுதல் முதலியன...... - - 'உண்டது. செரித்தாலும் அதன் பயனகிய இரதம் அருது ஆதலால் அதுவும் அறல்வேண்டும் என்பார், "மிகப்பசித்து' என்ருர். மாறு கொள்ளாமையாவது, உண் பவன் உணவு அளவோடு மாறு கொள்ளாமலும், கால