106 தமிழகக் கலைகள் இயல்போடு மாறுகொள்ளாமலும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையுமாம். அவற்றைக் குறிக் கொள்ளாது மனம் போனபடி உண்ணின், அதனல் நோயும் இறப்பும் உண்டாகும். 'இன்பமாவது, வாதம் முதலிய மூன்றும் தத்தம் கிலேயில் திரியாமலும் மனம், மொழி, மெய் என்பவை அதன் வயத்தவாதலும் அதல்ை அறம் முதலிய நான்கும் எய்தலுமாம்.' அயல்நாட்டார் மருத்துவ முறைகள் மொகலாயர் செல்வாக்குப் பரவிய காலத்தில் அவர்களுக்கே உரிய யூனுனி மருத்துவம் இக்காட்டில் பரவியது. எல்லா மருந்துகளிலும் இனிப்பு இருப்பதே பூனிை மருத்துவத்தின் சிறப்பியல்பு. ஐரோப்பியர் இங் காட்டில் குடிபுகுந்தது முதல் மேட்ைடு மருத்துவ (அல்ல பதி) முறை இந்நாட்டில் பரவத்தொடங்கியது. ஆங்கி லேயர் ஆட்சியில் இம்முறையைப் பரப்பவே மருத்துவக் கல்லூரிகள் ஏற்பட்டன. இன்றைய நாகரிகத்தில் இம் முறையே பெரிதும் பரவிவிட்டது. ஹோமியோபதி என்ற செர்மன் மருத்துவமுறையும் நாட்டில் சிறிதளவு பரவியுள்ளது. மருத்துவர் சிலர் இப்பலவகை மருத்துவ முறைகளேயும் அறிந்து, நோய்க்கு ஏற்றவாறு ஒவ்வொரு முறையைக் கையாளுகின்றனர். இங்ங்னம் கையாளுவதே இன்று சிறப்பாகக் கருதப்படு கிறது. - - மாதர் மருத்துவம் சிற்றுார்க் கிழவிகள் தேள்கடிக்கு ஒரு குறிப்பிட்ட பச்சிலையைக் கசக்கி அதன் சாற்றினை நுகரச் செய்கின்றனர். கொட்டுவாயில் வெங்காயத்தை வைத்துத் தேய்க்கின்றனர்;
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/121
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை