பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவக் கலை 107. சிறிதுநேரத்தில் வலி மறைகிறது. இவ்வாறு அப்பாட்டிமார் குழந்தை மருத்துவ முறையில் சிறந்து விளங்குகின்றனர். இவற்றை நோக்கப் பண்டைக்காலம் முதலே தமிழகத்தில் ஒவ்வொரு பெண்மணியும் குடும்ப மருத்துவ அறிவைப் பெற்றிருந்தாள் என்பது வெள்ளிடை மலே. ஆயினும் நவநாகரிகம் மிகுந்த இக்காலத்தில் நம் பெண்கள் குடும்ப மருத்துவ அறிவில் குறைந்துவிட்டனர் என்பது வருந்தற். குரியது. சித்த மருத்துவம் நமது தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் எனப்படும். சித்தர்கள் மலைக்குகைகளில் இருந்து தவம் செய்தவர்கள். அவர்கள் உடலை வளமாக வைத்துக்கொள்ளவும், நீண்ட காலம் வாழவும் பல மருந்துகளைச் செய்யத் தொடங்கினர்; மலே களில் இயற்கையாகப் பயிராகும் பலவகை மருந்துச் செடிகளைச் சேர்த்து ஒவ்வொன்றன் குணத்தையும் கண் டறிந்தனர்; அவற்றின் பச்சிலைகள், பச்சை வேர்கள், மரப்பட்டைகள் இவற்றைப் பயன்படுத்தினர்; காய்ந்த வேர்கள், இலைகள், பட்டைகள் இவற்றைப் பக்குவமாகப் பொடியாக்கிப் பயன்படுத்தினர்; மலைத்தேனையும் பயன் படுத்தினர். அப்பெருமக்கள் முறிந்த எலும்புகளைப் பொருத்தினர்; திராத நோய்களைத் தீர்த்தனர்; தம் மருத்துவ முறைகளைப் பல பாக்களாகப் பாடியுள்ளனர். அவை யாவும் பல மருந்து நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் வைத்திய-வாத-யோக-ஞான சாத்திரத் திரட்டு என்பது (18 பகுதிகள்) குறிப்பிடத்தக்கது கம் தமிழகத்தில் பொதியமலை, குற்ருல மலே, மருந்து மலே, திருக்கழுக்குன்றம் முதலிய மலைப்பகுதிகள் மருந்துச் செடிகட்குப் பெயர் பெற்ற இடங்களாகும். தஞ்சை-ஆபிரகாம் பண்டிதர் ஐம்பது ஆண்டுகட்கு முன் மிகச்சிறந்த மருத்துவராய் விளங்கினர்; பல மருந்துக்