பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சமயக் கலை சமய உணர்ச்சி தமிழர் பிறமொழி மக்களுடன் கலப்பின்றி வாழ்ந்த காலத்தில் இறந்தவர் வழிபாட்டையும் பாம்பு வணக்கத் தையும், இலிங்க வணக்கத்தையும் கொண்டிருந்தனர். குறிஞ்சிநில மக்கள் முருகனேயும், முல்லை நிலத்தார் மாயோனையும், மருதநில மக்கள் வேந்தனையும் (இந்திரனே யும்), நெய்தல் நிலத்தார் கடலையும், பாலகில மக்கள் காளியையும் வழிபட்டு வந்தனர். படிப்படியாக அறிவு வளர வளர, இத்தெய்வங்கட்கெல்லாம் மேலான பரம் பொருள் ஒன்று உண்டு என்ற கம்பிக்கை பழந்தமிழர்க்கு ஏற்பட்டது. அப்பரம்பொருள் எங்கும் தங்கியிருக்கின்றது. என்ற பொருளில் அதனே இறை என்றழைத்தனர்; அஃது எல்லாவற்றையும் கடந்து நிற்பது என்னும் பொருளில் அதனைக் கடவுள் என்றனர். இவை இரண்டும் முழுமுதற் பொருளைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொற்கள். திண கில மக்கள் அவரவர் அறிவு வளர்ச்சிக்கேற்பவும் பழக்க: வழக்கங்கட் கேற்பவும் வழிபாட்டு முறையைக் கைக் கொண்டனர்; தத்தம் கிலங்களில் கிடைக்கும் பொருள் களே வைத்துத் தத்தம் தெய்வங்களே வழிபட்டனர். சங்க காலத்தில் குறிஞ்சி கில மக்கள் முருக பூசையிட்டு ஆடிப்பாடியது குன்றக் குரவை எனப்பட்டது. பாலகில மக்கள் காளிக்குப் பூசையிட்டு ஆடிப்பாடியது வேட்டுவ வரி எனப்பட்டது. முல்லை கிலத்தார் கண்ணனே நோக்கி ஆடிப் பாடியது ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. இவ்வாறே மருத நிலத்