பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 10 தமிழகக் கலைகள் தார் ஆறுகளில் வெள்ளம் பெருகிவரும்போது ஆற்றைப் பூசித்து ஆடிப்பாடினர்; நெய்தல் கில மக்கள் சுரு:மீன் முதுகெலும்பை கட்டுக் கடல் தெய்வத்தை வழிபட்டுப் போற்றினர். சிற்றுார்களில் கிராம தேவதைகள் வழிபாடு நடைபெற்றது. பாராட்டத்தகும் பண்புடைப் பெரி யோர்கள், பத்தினிப் பெண்டிர் முதலியோர்க்கும் கோவில் கள் கட்டித் தமிழ் மக்கள் வழிபட்டனர். இதுகாறும் கூறிவந்த வழிபாடுகள் அகனத்தும் தமிழர்க்கே உரிய வழிபாடுகள். சமயக் கலப்பு வட இந்தியாவிலிருந்து வடமொழியாளர் தம் வேதங் .களுடனும் வேதகால வழிபாடுகளுடனும் தமிழகம் புகுந் தனர். அவர்கள் தீ, நீர், காற்று முதலிய பொருள்களைத் தெய்வங்களாக வழிபட்டனர்; மழைக் கடவுளாகிய இந்திரனை வழிபட்டனர்; அழித்தற் கடவுளான உருத்திரனே வழிபட்டனர்; தமிழகத்தில் நாளடைவில் அவர்தம் செல்வாக்கு மிகுதிப்பட்டது. தமிழரசர்கள் அவர். களே வளம் மிகுந்த ஆற்ருேரங்களில் குடியேற்றினர்; அவர்கட்கு கிலங்களையும் ஊர்களேயும் மானியமாக அளித் தனர்; அவர்களைக் கொண்டு, அதுகாறும் தமிழகத்தில் இல்லாத இராச சூய யாகம், அசுவமேதம் முதலிய யாகங் களைச் செய்ய்த் தலைப்பட்டனர். இந்த யாகங்களில் வேதி யரே புரோகிதராக இருந்தனர். பின்னர் நாளடைவில் அரசரிடம் செல்வாக்குப் பெற்ற காரணத்தால் வட மொழிப் புரோகிதர்களும் குருக்களும் தமிழகத்துக் கோவில்களில் அர்ச்சகராக இடம் பெற்றனர். அவர்களால் வடமொழி தமிழகக் கோவில்களில் புகுத்தப்பட்டது. பூசைக்குரிய மந்திரங்கள் வடமொழியிலேயே சொல்லப் பெற்றன. சிறுகச் சிறுகத் தமிழ் நாட்டுக் கோவில்களில் வடமொழியும் வடவர் வழிபாட்டு முறைகளும் காலப் போக்கில் வேரூன்றிவிட்டன. வடமொழி தேவர்களுக்குப்