பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயக் கலை 1 11 புரிந்த மொழியென்றும் அதனல் அது 'தேவமொழி' என்றும் கூறப்பட்டது. வடகாட்டில் வழங்கி வந்த கதைகள் யாவும் தென்னிந்தியக் கடவுளர்க்கு எற்றப் பட்டன. இலிங்க மூர்த்தமாக வழிபடப்பெற்ற சிவன், வடவர் வழிபட்டு வந்த உருத்திரகைக் கருதப்பட்டான். வடவர் கொண்டுவந்த உருத்திரன் அழித்தற் கடவுள்; சுடுகாட்டுத் தெய்வம், மண்டையோடுகளே மாலேயாகக் கோத்துத் தலையி லணிந்தவன்; மயானத்தில் நடனமாடுபவன்; பிணச் சாம் பலே பூசிக் கொண்டிருப்பவன். உருத்திரனேப் பற்றிய இக் கருத்துக்கள் சிவனுக்கு ஏற்றிக் கூறப்பட்டன. பாலைநிலத் தேவதையான கொற்றவை, துர்க்கை என்று பெயரிடப் பட்டு சிவனுக்கு மனைவியாக்கப்பட்டாள். முருகன் கார்த் திகை என்ற அறுவரால் வளர்க்கப்பட்டவன் என்ற கதையோடு தொடர்பு படுத்தப்பட்டு அறுமுகன் ஆக்கப் பட்டான்; சுப்பிரமணியன் என்ற புதிய பெயரையும் பெற்ருன், தேவேந்திரன் மகளாகிய தெய்வயானை அவ னுக்கு மனேவியாக்கப்பட்டாள். - இவ்வாறு வடமொழியாளர் கூட்டுறவால் பழங் தமிழர் சமயத்தில் சமயக் கலப்பு ஏற்பட்டது. வேதங்களில் உருத்திரனேப் பற்றியும் பிற தெய்வங்களைப் பற்றியும் எழுதப் பெற்றிருந்த கதைகளெல்லாம் தமிழகத்துச் சிவ நெறியிலும் மால் நெறியிலும் இடம் பெற்றன. தேவர்கள் அசுரர்கள் கதைகளும், அசுரர்களே அழிக்க இறைவன் மேற்கொண்ட அவதாரங்களும் பிற முயற்சிகளும் பற்றிய கதைகளும், தமிழகத்திற் பரவின. இங்ங்ணம் பரவிய இக்கதைகள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. - வடநாட்டுச் சமயங்கள் - - அதே சங்க காலத்தில், வடகாட்டில் தோன்றிய பெளத்தமும் சமணமும் தமிழகத்தில் நுழைந்தன. அவை