பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 தமிழகக் கலைகள் இரண்டும் மனிதரை அன்பாற் பிணேக்கும் சமயங்கள்; சாதி வேறுபாடுகளைப் பேசாதவை; அன்பு வாழ்க்கையே தேவை என்று வற்புறுத்தியவை; ஆயினும் கடுமையான விரதங்களையுடையவை; பெளத்த துறவிகளும் சமணத் துறவிகளும் தாங்கள் வாழ்ந்த இடங்களில் இருந்த கூடத் தில் தமிழ் மக்களுக்குக் கல்வி கற்பித்தனர்; அவர்கள் வாழ்ந்த இடங்கள் பள்ளிகள் எனப்பட்டன. இக் காரணத் தாலேயே கல்விச் சாலைகள் பள்ளிகள் எனப் பெயர் பெற்றன. சமணரும் பெளத்தரும் பொதுமக்கட்குச் சமயக் கல்வியும் பொதுக் கல்வியும் கற்பித்தனர்; மருத்துவம் முதலிய உதவிகளைப் புரிந்தனர்; ஒழுக்க சீலராய் கடக் தனர்; இவற்ருல் அவர்கள் செல்வாக்குத் தமிழகத்தில் நன்கு பரவியது. சைவ-வைணவ நெறிகள் சமண பெளத்த நோன்புகள் பின்பற்றக் கடுமை யானவை. மேலும் உலகப் பற்றே கூடாது என்பது அவர் தம் அழுத்தமான கொள்கை. தமிழ் மக்கள் இவற்றை முற்றிலும் பின்பற்ற முடியவில்லை. இச்சமயத்தில் வட இந்தியாவில் (கி. பி. 300-600) பக்தி நெறி உண்டா யிற்று. கோவில்களிலுள்ள கடவுளர் திருவுருவங்களே நன்ருக அலங்களித்தல், அவற்றிற்குப் பூசையிடுதல், உணவுப் பொருள்களேயெல்லாம் வைத்துப் படைத்தல், விழாக்கள் செய்தல், இறைவனே ஆடியும் பாடியும் துதித்தல்-இவற்றைக் கூறுவதே பக்திநெறி என்பதாகும். இம்முறை. தமிழகத்தில் பரவியது. சமண பெளத்தர்களின் கோன்புகளிலும் பிறவற்றிலும் சலிப்புற்ற தமிழ் மக்கள் இப் புதிய நெறியில் புகுந்தனர். அப்பொழுது தமிழ் நாட்டை ஆண்டவர் பல்லவ, பாண்டியராவர். அவர்கள் இப் புதிய நெறிக்கு ஆக்கமளித்தனர்; பெரும் பொருள் வழங்கினர். மன்னரது ஆக்கத்தாலும் மக்களுடைய