பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயக் கலை 113 விருப்பத்தாலும் இப்புதிய நெறி தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றது. வடமொழியாளர் கூட்டுறவால் இப் பக்தி நெறி நுழைக்கப்பட்டது. ஆகவே, சிவநெறி - சைவ நெறி என்றும், மால் நெறி - வைணவ நெறி என்றும் வட மொழி இலக்கணப்படி பெயர் மாற்றம் பெற்றன. ஒவ்வொரு தலத்திலும் வடகாட்டு முனிவர் வந்து தவம் செய்ததாகவும், அத்தலத்தைப் பூசித்ததாகவும் கதைகள் கட்டிவிடப்பட்டன. சமயவாதிகள் இவற்றில் மிக்க ஆர்வத்தைக் காட்டினர். ஒவ்வொரு கோவிலிலும் நடனம், நாடகம் என்பன வளர்ச்சி பெறலாயின. கோவில் வேஅலகள் வளரத் தொடங்கின. கோவில்கள் உருவத்தில் பெருகின. பொதுமக்களும் அரசரும் கோவில் திருப்பணி புரிந்தனர். ஒவ்வோர் ஊரிலும் கோவில் நடுநாயகமாக விளங்கத் தலைப்பட்டது. இவ்வாறு கோவில் உருவத்திலும் செல்வத் திலும் பெருகவே, கோவில் ஆட்சியாளர் ஏற்பட்டனர். ஊராட்சி மன்றத்தாரும் கோவிலாட்சியிற் பங்கு கொண்டனர். கோவிற் பணியாள பெரிய கோவில்களில் பலவகைப் பணி மக்கள் வேஆல செய்தனர். கோவில் அர்ச்சகர், இசை வல்லுநர், தேவா ரம் ஒதுவார், ஆடுமகளிர் எனப் பல வகையினர் இருந்த னர். பக்திப் பாடல்களுக்கேற்ப கடிக்கும் நடிகையர் ஒவ் வொரு பெரிய கோவிலிலும் இருந்தனர். அவர்களில் சிலர் பாட்டிலும் வல்லவராயிருந்தனர். அவர்கள் பதியிலார், கணிகையர், தளியிலார், மாணிக்கத்தார் எனப் பல பெயர்கள் பெற்றிருந்தனர். அவர்கள் ஆடின கடன வகைகள் இன்று நாமறியுமாறு இல்லை. சிவன் கோவில் களில் திருப்பதிகம் (தேவ ராப் பாடல்கள்) விண்ணப்பம் செய்யும் தொழிலில் பலர் இருந்தனர். பிற்காலச் சோழர் 8