பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 14 தமிழகக் கலைகள் காலத்தில் பல கோவில்களில் நூல் நிலையங்களும், சமய நூல்களைப் பாதுகாக்கும் கிருக்கைக்கோட்டி மண்டபங் களும், இலக்கணம், சமய நூல்கள் இவற்றைக் கற்பிக்கும் மண்டபங்களும், நடன சாலைகளும் அமைந்திருந்தன. பெருங் கோவில்களில் ஆண்டின் எல்லா மாதங்களிலும் விழாக்கள் நடைபெற்றன. வைணவர் கோவில்களிலும் இங்ங்னமே நடைபெற்றன. மடங்கள் சில பெரிய கோவில்களே அடுத்து மடங்கள் இருந்தன. அவற்றில் சமய நூலறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த துறவிகள் இருந்து பொது மக்கட்குச் சமய அறிவுரைகள் நிகழ்த்தி வந்தனர். கோவிலாட்சியில் சில இடங்களில் மடத்துத் கலேவர்களுக்கு இடம் தரப்பட்டது. சோழ பாண்டியர் ஆட்சி வீழ்ந்த பிற்காலத்தில் இன்றுள்ள மடங்கள் தோன்றின. மதத்தைப் பொது மக்கட்கு அறிவுறுத்த மதத் துறவிகள் தேவைப்பட்டனர். பிற்காலச் சிற்றரசரும் செல்வரும் பொதுமக்களும் அம் மடங்களுக்கு கிலத்தையும் செல்வத்தையும் வாரி வழங் கினர். திருவாடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், திருவண்ணுமலை ஆதீனம் என்பன சித்தாந்த சைவ மடங்கள். விருத்தாசலத்து மடம், மயிலம் மடம், குடந்தை மடம் என்பவை வீர சைவ மடங்கள். அகோபில மடம், வானமாமலை சீயர் மடம் என்பன வேதாந்த மடங்கள். குடந்தை சங்கராச்சாரியார் மடம் வைணவ மடம். இவை தொடக்கத்தில் சமயத்தொண்டு செய்து வந்தன; காலப்போக்கில் காட்டின் ஆட்சி மாறு பாட்டாலும் சமுதாய மாற்றங்களாலும், ஆங்கிலக் கல்வி பாலும் பிற காரணங்களாலும் தமக்குரிய சமயத் தொண்டினைச் சரிவரச் செய்ய முடியவில்லை.