பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயக் கலை 115 பிற்காலத்தில் பின் நூற்ருண்டுகளில் கருநாடக நவாபுகளின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர் நாடு பிடிக்கச் செய்த போராட்டங்களில்ை கோவிலாட்சி முறை கெட்டது. அவ்வாறே மடங்களின் வரன்முறைச் செயல்களும் கெட்டன. நாடே குழப்பத்திலிருந்ததால் காட்டு மக்கள் இதனைக் கவனிக்கவில்லை. ஆங்கில அரசு ஏற்பட்டதும், மக்கள் ஆங்கிலம் கற்கத் தொடங்கினர். சிலர் கிறித்தவ ராயினர். கிறித்தவத் துறவிகளின் சமயத்தொண்டு மக்கள் உள்ளங்களைக் கொள்ளே கொண்டது. அத்தகைய தொண்டு (இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வாழ்க் கையை உயர்த்தல்) பிற சமயங்களில் இல்லாததை மக்கள் வெறுத்தனர். சமய நூல்களில் கிறைந்த புலமையும் சிறந்த ஒழுக்கமும் இல்லாத பலர் பரம்பரை உரிமை கொண்டாடி கோவில் அர்ச்சகராகவும் ஆட்சியாளராக வும் வந்துகொண்டிருந்த முறையைப் பொது மக்கள் வெறுத்தனர். மக்கட்கு கல்லறிவு புகட்ட இயலாத நிலையில் விழாக்கள் பல நடைபெறலாயின. இன்ன பிற காரணங்களால், சோழர் காலச் சமய நடைமுறை இக் காலத்தில் குறைந்துவிட்டது. இன்று பெயரளவில் கோவிற் செயல்கள் நடைபெறுகின்றன. காலத்துக்கேற்ற வாறு கொள்ளத் தக்கன கொண்டு, தள்ளத் தக்கன தள்ளிச் சமயத்தை வளர்க்க வேண்டும் என்ற அறிவு சமுதாயத்தில் பலர்க்கு ஏற்படவில்லே. சமயத்தின் பெயரால் சமுதாயம் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரே சமுதாயத்தைச் சார்ந்த மக்களுள் பல நூறு சாதிகள் உள. ஒருவரோடு ஒருவர் கொள்வனே கொடுப்பனே இல்லை; உணவு உண்பதில்லை; நெருங்கிப் பழகுவதுமில்லை. இந்த கிலேயில் இவர்களே உறுப்பினர் களாகக் கொண்ட சமயம் எப்படி முழுவன்மையுடன் வாழமுடியும்? எனவே, இன்று சமயம் என்பது பெயரள வில் இருந்து வருகிறது என்று கூறுவது பொருந்தும்.