பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயக் கலை 117 லாகாது என்பது சமணர் கொள்கை. முற்றும் துறங் தார்க்கே வீடு; பெண்கள் முற்றும் துறக்க இயலாதாகை யால் அவர்கள் இப்பிறப்பில் சமணர் கொள்கைகளைப் பின் பற்றில்ை அடுத்த பிறவியில் ஆடவராய்ப் பிறப்பர், பின்பு முற்றும் துறக்கலாம்-துறந்தால் வீடு பெறலாம் என்பது சமணர் கொள்கை. முற்றும் துறந்த பெரியோர்க்கு வழங்குவது தானம்; அமாவாசை, பெளர்ணமி, அட்டமி ஆகிய நாட்களில் உண் ணுகோன்பு மேற்கொள்வதே தவம், ஈக்களைக் கொன்று தேனெடுத்தலால் தேனே உண்ணலாகாது; அறிவை மயக்கும் கள்ளேயும் பருகலாகாது; பிற உயிர் களைக் கொன்று அவற்றின் ஊனே உண்ணலாகாது; இங்ங் னம் இருப்பதே சீலம் (ஒழுக்கம்) எனப்படும். அசோகமரத் தினடியில் மூன்று குடைகளின் கீழ் அமர்ந்துள்ள அருக தேவனே மலர், புகை, சாந்தம, விளக்கு இவற்ருல் வழிபட வேண்டும். இங்ங்னம் தானம், தவம், சீலம், அருகதேவன் பூசனை ஆகிய நான்கும் தவருது செய்பவர் வீடுபேறு அடைபவர் என்பது சமணக் கொள்கை. இக் கொள்கைகள் தமிழ் மக்களால் கடுமையாகப் பின்பற்ற முடியவில்லை. சைவரும், வைதிகரும், பெளத் தரும், வைணவரும் சமண சமயத்தை வன்மையாக எதிர்த் தனர். அவ்வாறே வைதிகரும் சமணரும் பெளத்தத்தை எதிர்த்தனர். கி. பி. 7, 8, 9 ஆம் நூற்ருண்டுகளில் பல மான சமயப் போர்கள் நடைபெற்றன. இவற்ருல் சமண மும் பெளத்தமும் தம் செல்வாக்கை இழந்தன. அதனல் வைதிகச் சைவமும், வைதிக வைணமும் வளர்ச்சியுறத் தொடங்கின. ஆயின், மிகச் சில இடங்களில் சமணரும், பெளத்தரும் இருந்து சமயத் தொண்டுகளையும் இலக்கியப் பணியையும் இடைவிடாது செய்தனர் என்பது கல் வெட் டுக்களாலும் பிற்கால நூல்களாலும் தெரிகின்றது.