பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தத்துவக் கலை (1) சமண சமய தத்துவம் சமண சமயம் சமணர் (ஸ்ரமனர்) என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. துறவு.சம ணம். எனவே, இது சமண சமயம் எனப்பட்டது. புலன் களேயும் வினைகளேயும் ஜயித்தவர் இச்சமய ஆசாரியார்கள் ஆதலால் ஜினர் எனப்பட்டனர். ஜினரை வழிபடும் சமயம் ஜைன சமயம் எனப்பட்டது. இச்சமயக் கடவுளுக்கு அருகன் என்ற பெயரும் உண்டு. ஆதலால் அருகனே வழிபடும் சமயம் ஆருகத சமயம் எனப்பட்டது; அருகனை வணங்கினேர் ஆருகதர் (Athat) எனப்பட்டனர். சமண சமயக் கொள்கைகளே உலகத்தில் பரப்பப் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுவர் என்பது சமண சமயக் கொள்கை. இதுவரை 24 பெரியவர்கள் (இர்த் தங்கரர்) தோன்றினர். அவருள் முதல்வர் விருஷப தேவர் (ஆதிபகவன்); 34-ஆம் தீர்த்தங்கரர் வர்த்தமான மகா வீரர் என்று இச்சமயத்தார் கூறுவர். ஆயின், வரலாற்று ஆசிரியர், புத்தர் காலத்தில் வாழ்ந்திருந்த வர்த்தமான தீர்த்தங்கரரை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர் காலம் கி. மு. 6-ஆம் நூற்ருண்டு. அவருக்கு மகாவீரர் என்ற பெயரும் உண்டு. சமண சமயம் பிற்காலத்தில் திகம்பர சமணம், சுவே. தாம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என மூன்முகப்