பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை 119 பிரிந்தது. திகம்பரர்.திசைகளே ஆடையாக உடுத்தவர்; ஆடையின்றி இருப்பவர். சுவாதாம்பர சமணர்-வெண்ணிற ஆடை அணிபவர். இவ்விருவரும் உருவ வழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணர்-சமண ஆகம நூல்களை மட்டும் வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும், அருகக் கடவு ளாகவும் கருதி வணங்குவர். தமிழகத்தில் திகம்பர சமணரே இருந்தனர் திகம்பரசமணம் கி. மு. 8-ஆம் நூற்ருண்டில் தமிழகத்தில் நுழைந்தது. அவர்கள் ஆடையின்றி இருந்த தால் அமணர் எனப்பட்டனர். சமண சமய தத்துவம் சமண சமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் குறிக் கப்படுகின்றன. இவை நவ பதார்த்தம்' எனப்படும். இவை, உயிர், உயிரல்லது, புண்ணியம், பாபம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு எனப்படும். (1) உயிர்கள் பல; அழிவற்றவை. கடவுள் உயிர் களைப் படைக்கவில்லை. உயிர்கள் ஒரறிவுயிர் முதல் ஐயரி வுயிர் ஈருக ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் மனம் உடையவை, மனம் இல்லாதவை என இருவகைப்படும். (மனம்-பகுத்தறிவு). உயிர் கல்வினை தீவினைகளைச் செய்து அவற்றின் பயனகிய இன்பதுன்பங்களைத் துய்ப்பதற்கும் நரககதி, விலங்குகதி, மக்கள் கதி, தேவகதிகளில் பிறந்து இறந்து உழன்று திரியும்; காலப்போக்கில் இருவினைகளே யும் அறுத்துப் பேரின்ப வீட்டினை அடையும். இஃது உயிர் களின் இயல்பு. மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டுமே விடுபேறு பெறும். மக்களுள்ளும் துறவிகளே வீடு பேற்றை அடைவர். இல்லறத்தார்க்கு வீடு பேறு இல்லை. (2) காலம், ஆகாயம் முதலியன உயிரற்றவை. இவையும் தொன்றுகொட்டு இருப்பவை.