பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை 1 21 விரண்டையும் உளத்திற் கொண்டு ஒழுகுவதே நல்லொழுக் கம் எனப்படும். இம்மூன்றும் 'இரத்தினத் திரயம் என்றும் மும்மணி என்றும் சொல்லப்படும். இவை மூன்றும் வீடு பேற்றுக்கு இன்றியமையாதவை." (2) பெளத்த சமய தத்துவம் புத்த சமயம் புத்தர் அரசகுமாரர்; கி. மு. 6-ஆம் நூற்ருண்டினர்; உயிர்களின் துன்பத்தை ஒழிக்கத் துறவு பூண்டு முனிவர் பலருடன் சென்று, தத்துவ விசாரணை செய்து, இறுதியில் போதி (அரச) மர நிழலில் அமர்ந்து யோகத்தில் இருங் தார். அப்போது அவருக்கு விளங்கிய உண்மைகளே புத்த சமய தத்துவம் எனப்பட்டன. அவர் அன்று முதல் புத்தர் (ஞானி) என்றழைக்கப்பட்டார். பெளத்த சமயம் புத்தர் காலத்தில் ஒன்ருகவே இருந்தது. பின்பு, அது இரண்டாகப் பிரிந்தது. புத்தர் காலச் சமயம் ஹீனயானம் எனப்பட்டது; பின்பு கோன்றியது மகாயானம் எனப் பட்டது. புத்தர் கருத்துக்கள் “உலக வாழ்வு துன்பக்கடல் - அத்துன்பத்தைத் தொடர்ச்சியாக வளர்ப்பது மறுபிறப்பு-மக்கள் அடையத் தகும் மேலான உறுதிப்பொருள் பிறவாமையே-பற்றற்றுப் பயன் நோக்காது செய்யும் நற்செயல்களே அப்பிறவாமைக் குக் காரணங்களாகும்; என்பன புத்தர் கண்டறிந்த உண்மைகள். 'சுயநலத்தைக் கருதி முயல்வது அறமன்று 1. மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்.1-5.