பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழகக் கலைகள் அம்முயற்சி உலகப்பற்றினே வளர்த்துக் கொண்டே வருவது. ஆதலால் பயன் கருதாமல் பிறர் பொருட்டுச் செய்யும் செயலே, துன்பந்தரும் உலகப் பற்றினை அறுப்பது' என்பது புத்தர் கொள்கை. புத்தர் உரைத்த அறம் (1) நான்கு நினைவுகள் : (1) உடல் தூய்மையற் றது என்று கினைத்தல், (3) நுகர்வுகளிலிருந்து உண்டாகும் கேடுகளை நினைத்தல், (3) எண்ணங்களின் நிலையற்ற தன்மையை நினைத்தல், (4) இருப்புக்கு இயல்பான தன்மைகளே கினைத்தல். (2) நான்கு நன்முயற்சிகள்: (1) திய குணங்கள் உண்டாகாமல் தடுக்க முயலுதல், (3) பின்னரே உண் டாகியிருக்கும் தீயகுணங்களே விலக்க முயலுதல், () முன்பு இல்லாத நன்மையை உண்டாக்க முயலுதல், (4) முன்பு உண்டாகியுள்ள நன்மையை மிகைப்படுத்த முயலுதல். 3. சித்தியைப் பெறுதற்குரிய நான்கு வழிகள்: (1) இருத்தியைப் பெறவேண்டும் என்னும் கினைப்பு, (3) இருத்தியைப் பெறுவதற்குரிய முயற்சி, (3) இருத்தியைப் பெறுவதற்குரிய மனநிலை, (4) இருத்தியைப் பெறுவதற். குரிய ஆராய்ச்சி. 4. ஐவகை ஆற்றல்கள்: (1) நீத்தை, (2) திறமை, (8) நினைவு, (4) உருவேற்றல், (5) ஊகித்தல். 5. உண்மை ஞானத்தை உண்டாக்குவதற்குரிய கருவிகள்: (1) திறமை, (3) நினைவு, (3) உருவேற்றல் (மனனம்), (4) திரிபிடக ஆராய்ச்சி, (5) மகிழ்ச்சி, (6) அமைதி, (?) ஒத்த பார்வை (சமதிருஷ்டி). 2. சூத்திரப்பிடகம், வினயபிடகம், அபிதர்ம பிடகம் என்னும் மூவகைப்பட்ட பெளத்த ஆகமத் தொகுதி.