பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை 125. உலகத்தில் காணப்படும் பொருள்கள் யாவும் நம் புலன்களினுடைய மருட்சியில்ை காணப்படும் தோற்றங் களே அல்லாமல் உண்மையானவை அல்ல. நம் கண்களுக்குத் தெரிந்துள்ள உலகத்திலும் தெரி' யாத உலகங்களிலும் பரவி, உயிர்க்குயிராக இருக்கின்ற ஒன்றே பிரமம் என்பது. சொல்லளவு அப்பிரமம் வேறு, உலகம் வேறு என்று சொல்லலாம். ஆனால், உலகம் பிர மத்தை ஆதாரமாகக் கொண்டு அதன் கண்ணே இருக் கின்றது. ஆதலால், உலகம், பிரமம் ஆகிய இரண்டும் வேறு அல்ல - இரண்டு அல்ல - இரண்டும் அற்ற நிலை. இந்த இரண்டும் அற்ற கிலேயே வட மொழியில் அத்வைதம் எனப்படும். பிரமம் உலகமாகப் பரிணமிப்பதும், உலகம் பிரமத். துள் ஒடுங்குவதும் இந்த அத்வைத சித்தாந்தத்தின் விதி. சாதாரண அறிவில் பிரமம்' எனவும், உலகம்' எனவும் இரண்டாகத் தோன்றிலுைம், ஞான நெறியில் எல்லாம் பிரமமாகவே காணப்படுவதால், இவை பரஞானம், அபர ஞானத்திற்குரிய உட்கருவியாகிய மனத்தின்கண் அரு. ளுணர்வாய்த் தோன்றுகிறது. செந்தாமரை செம்மை + தாமரை. பண்பும் பொருளும்போல இரண்டாயும், பண் பைப்போல ஒன்ருயும் இருக்கும் தன்மையே அத்வைதம். அத்வைதக் கொள்கையின்படி, உயிர் உடலினும் வேறுபட்டது; உண்மையாது; உலகப் பற்றுக்களிலி' ருந்து விடுபட்டவுடன் இறைவனிடம் சேர்வது. மனிதன் அறிவு இருவகைப்படும். அவை, (1) அபரஞானம், (3) பரஞானம் என்பன. (1) கண், காது போன்ற பொறி, புலன்களாலும், மனம், பத்தி, சித்தம், அகங்காரம் முதலிய அந்தக்கர ணங்களாலும் காணப்படுகின்ற இந்த உலகம் பற்றிய