பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"1 24 தமிழகக் கலைகள் மூன்ரும் தியானம்: துறவி, காமம் முதலியவற்றை ஒழித்து, மகிழ்ச்சியைப் பெற்று, பொறுமை அறிவு முதலிய வற்ருேடு கூடிய இன்பத்தைத் தன்னுள் அநுபவித்தல். நான்காம் தியானம்: இன்பமும் இல்லாமல் துன்பமும் இல்லாமல் இருக்கின்ற ஒத்த பார்வையையும் அறிவையும் கொண்டுள்ள தூய கிலே. - இத் தியானங்கள் நான்கும் சமாதிக்கு உதவியா யுள்ளன. - - - புத்த சமயத்தினர்க்குப் புத்தர், தர்மம், சங்கம் என்னும் மூன்றும் சிறந்தவை. இவை, மும்மணிகள் எனப்படும். மேலே சொல்லப்பெற்றவை பெளத்த தர்மத்தைச் சேர்ந்தவை. இவை அல்லாமல் பெளத்த தர்மத்தில், தாய் தந்தையர்-மக்களுக்குரிய ஒழுக்கங்கள், ஆசிரியர். மாணவர்க்குரிய ஒழுக்கங்கள், கண்பர் ஒருவரிடத்தில் ஒருவர் கடந்துகொள்ளத்தகும் ஒழுக்கங்கள், முதலாளிக் கும் தொழிலாளிக்கும் உரிய ஒழுக்கங்கள், இல்லறத்தார்க் கும் துறவிக்கும் உரிய ஒழுக்கங்கள் முதலியன விரிவாக வும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன. துறவிகள், மேலே சொல்லப்பெற்ற சித்திக்குரிய துறைகளில் வெற்றி பெற் ருல், பரிசிர்வாணம் என்னும் துன்பமற்ற கிலேயை அடை வர் என்று பெளத்த நூல்கள் கூறுகின்றன!’ 3. அத்வைதம் • «JF/Б/ Q5 [rif இவர், கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் மலேயாள மாவட் .டத்திலுள்ள காலடி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இவரது கொள்கை அத்வைதம் எனப்படும். - 3. மணிமேகலை, பக். 96-107