பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"t 26 தமிழகக் கலைகள் அறிவே சாதாரண அறிவு (அபரஞானம்). இந்த அறிவு, மெய்போலத் தோன்றிப் பொய்யாகி கிலேயற்று ஒழிவது. (2) இந்த உலகிற்கு ஆதாரமாய் இருக்கின்ற பிர மத்தைப்பற்றிய அறிவே மேலான அறிவு (பரஞானம், அந்த அறிவு கிலேயானது. பிரமத்தை அறியும் வழி பார மார்த்திகம் எனப்படும். உயிர் மேலான அறிவை அறிந் ததும், அதனேப் பற்றியிருந்த பற்றுக்கள் அகன்று, அந்த கிலேயில் அது 'ஆத்மா எனப் பெயர் பெறும். பர .ஞானத்தைப் பெற்ற அந்த ஆத்மா இறைவனுடன் கலந்து விடுகிறது.

  1. ᎬafᎢ6ᏈᎠᎿᎥ Ꭵ

உலகத்தின் கிலேயாமையே மாயை என்பது. இடம், காலம், காரணம் முதலியவை நம் அநுபவத்தின் ஆதாரமாய் இருந்தும், மெய்போல் தோன்றிப் பொய்யாய் மறைகின்றன. இவை, தம்முள் முரணுய் இருக்கின்றன. இவ்வுலக அறிவு எக்காலத்திலும் பொருத்தமற்ற அறிவாக இருக்கின்றது. நமது உள்ளுணர்வு மிகும்போது இவ் வுலகம் நம் நினைவிலிருந்து மறைகின்றது. சாதாரண அறிவு (அபரஞானம்) கொண்டு நாம் காணும் பொருள்கள் மாயை எனப்படும். இம்மறையும் உலகத்தையும், அதன் பொருள்களேயும் மாயை என்று அறிஞர் கூறுவர். உல கத்திற்கு உண்மைத்தன்மை இல்லை என்று மனத்தை மறைப்பதும் மாயைத் தன்மைதான். கிலேயற்ற இவ்வுலகத்தையும் (உலக நிகழ்ச்சிகள்) கிலேயுள்ள உலகத்தையும் (பிரமத்தோடு கூடிய உலகத் தையும்) ஒரே சமயத்தில் காம் அநுபவிக்க முடியாது. இந் கிலேயற்ற உலகமும் கிலேயான உலகத்தால் கிலே பெறுகின் றது. ஆல்ை நம் சிறிய அநுபவமும், இவ்வுண்மையைக் காட்டுவதில்லை. உள்ளுணர்வால்தான் இதை உணர முடியும். -