பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை 127 மாயை என்ற இருளால், உயிர், தன் மேலான அறிவு குன்றிக்கிடக்கிறது. மேலான அறிவே இந்த இருளே அகற்ற முடியும். பிரமத்தைப் பரமான்மா என்றும், உயிரை ஜீவான்மா என்றும் கூறுவர். இரண்டும் ஒன்றே ஆயினும் உடம்பு மாயை இவற்றில் கட்டுப்பட்ட ஜீவான் மாவை நோக்கப் பரமான்மா வேறுபட்டதாக அறிஞர் உபசரித்துக் கூறுவர். இறைவனே அடையும் வழிகள் உயிர் இறைவனே அடைய மூன்று கிலைகளைக் கடத்தல் வேண்டும். அவை, (1) குருவிடம் பயிற்சி பெறுதல், (3) நினைத்துப் பார்த்தல் (Reflection), (3) வழிபாடு என்பன. (1) முதலில் குருவிடம் பயிற்சி பெறுதல் வேண்டும்; தனக்கும் உலகப் பொருள்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது போன்ற உண்மைகளைக் குருவின் வாயி லாக அறிதலே முதல் கிலே ஆகும். (3) இங்ங்னம் குருவினிடம் அறிந்த உண்மைகளைத் தன் அன்ருட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டு அறிதலே இரண்டாம் கிலே. (3) குருவின் வாயிலாக இறைவனைப்பற்றித் தான் கேட்ட உண்மைகளேத் தன் அன்ருட வாழ்க்கையில் அது பவித்த மனிதன், தனது தியானத்தின் வாயிலாகத் தெளி வாக அறிகின்றன். இந்த கிலேயில் அவன் பிரமத்தை உணருவதோடு, தானே பிரமமாகவும் ஆகின்ருன். இந்த கிலேயை அடைபவனே 'சீவன் முக்தன்' எனப்படுவான். இவனே எல்லாப் பற்றுக்களினின்றும் விடுபட்ட மனிதன் என்றும் கூறலாம். இவனது ஆத்மா உடலைவிட்டுப் பிரிந்ததும் இறைவனேடு கலந்து விடுகின்றது. - மனித வாழ்க்கை நீரோட்டமுள்ள ஆற்றுர்ேக் குமிழியை ஒக்கும்; குமிழியும் நீர்தான் ஒடும் ஆற்றிலும்