பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தமிழகக் கலைகள் அதே ர்ேதான் இருக்கிறது. அதே போன்று சீவாத் மாவும் பரமாத்மாவும் ஒன்றே. இதுவே அத்வைத தத் து வத்தின் உயிர்காடி. இந்த அத்வைத தத்துவம் 'ஏகான்ம வாதம் என்றும் சொல்லப்படும். (4) விசிட்டாத்துவைதம் இது இராமாநுசர் உபதேசித்த சமய தத்துவம். இவர் கி. பி. 11-ஆம் நூற்ருண்டினர்; முதற் குலோத் துங்கன் காலத்தினர். ஆன்மாவிற்கும் உடம்பிற்கும் உள்ள தொடர்பு இரண்டற்ற (அத்வைத சம்பந்தம். அதுபோலவே ஆள். மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள இரண்டற்றதொடர்பும் அத்துவைத தொடர்பே. ஆல்ை ஆன்மாவிற்கும் இறை வனுக்கும் உள்ள இரண்டற்ற தொடர்பு, ஆன்மாவிற்கும் உடம்பிற்கும் உள்ள இரண்டற்ற முறையைவிட விசிட்ட மானது சிறந்தது) பற்றி விசிட்டாத்துவைதம் எனப்பட் டது. சீவான்மா உரிமையற்றது. பரமான்மா உரிமை யுடையது; (விசேடமானது). இது பற்றிய அத்துவைதம் விசிட்டாத்துவைதம் எனப்பட்டது. (1) உலகம், பிரமம் இவை வெவ்வேறு ஆயினும் ஒன்று என்பது அத்வைதம். உலகம், பிரமம் எல்லாம் பிரமத்தின் உருவே. எனவே, மாயை என ஒன்று இல்லை என்பது விசிட்டாத்துவைதம், - (3) உயிர் பீரமத்தின் எல்லா அம்சங்களையும் உடை யது என்பது அத்துவைதம். படைப்பு, இலக்குமி நாய கத்தன்மை என்ற இரண்டும் நீங்கலாக பிரமத்திற்கு உரிய எல்லாம் உயிருக்கும் உண்டு என்பது விசிட்டாத் துவைதம.