பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை 1 2 3 (3) முத்தி என்பது பிரம ஞானத்தால் மட்டுமே உண்டாவது என்பது அத்துவைதம். முத்திக்குப் பக்தியே அடிப்படை, ஞான பக்தியே சிறப்பானது என்பது விசிட் டாத்துவைதம். - (4) பிரமமும் உயிரும் ஒன்றே என்பது அத்துவை தம்; பிரமம்-உயிர் உறவு, ஆண்டான்-அடிமை உறவு போன்றது என்பது விசிட்டாத்துவைதம். (5) பிரமமும் உயிரும் ஒன்றே எனல் அத்துவைதம்; பிரமமும் உயிரும் நாயக-நாயகி உறவு கொண்டவை என்பது விசிட்டாத்துவைதம். - (6) தத்துவமசி-தோன் அது. அகம் ப்ரம்மாஸ்மி-நானே பிரமம். இவை அத்துவைதக் கருத்துக்கள். ஓம் நமோ நாராயணுய-எட்டெழுத்து பூரீமத் நாராயண சரணெள சரணம் பிரபத்யே பூரீமத் காராயணுய நம: இவை விசிட்டாத்துவைத மந்திரங்கள். உயிர் வீடு பேற்றை அடைய இரண்டு வழிகள் உண்டு. அவை பிராப்தி என்றும் பக்தி என்றும் சொல்லப் படும். பிராப்தி என்பது வைணவத்தில் கொண்ட நம் பிக்கை வழியாக வீடுபேறு அடைதல்; உபநிடதங்களில் காட்டப்படும் பக்தி நெறிப்படி வீடடைய மூன்று படி களைக் கடத்தல் வேண்டும். அவை கர்மயோகம், ஞான யோகம், பத்தியோகம் எனப்படும். - (1) ஒருவன் தன் கடமைகளேச் செய்தலும், தன் னேயே கடவுளுக்கு உரிமையாக்குதல் எவ்வாறு என்பதை உணர்தலும் கர்மயோகம் எனப்படும். (3) கர்மயோகத் 9 - - - -