பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 30 தமிழகக் கலைகள் தில் பழகியவன் தன்னுடைய உண்மையான நிலையையும், கிலேயாமையாகிய தன்மையையும், தனக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பையும் உணர்வான். இங்ங்ணம் உணரும் முயற்சி ஞானயோகம் எனப்படும். (3) பக்தியோகம் என்பது குருட்டு நம்பிக்கையன்று; உயர்ந்த அறிவினை அடிப்படையாகக் கொண்ட கடவுளைப்பற்றிய தியானத் தில் உண்மையான கம்பிக்கையும் அன்பும் கொள்வதே பக்தியோகம். இம்மூன்று நிலைகளேயும் கடந்த உயிரே வீடு பேற்றை அடையும். உலகமும் உயிரும் கடவுளால் ஆக்கப்பட்டன. எனவே உலகம் மாயை அன்று, உலக கிலேயாமை மாத்திரம் கொண்டு உலகம் இல்லை எனக் கூறுதல் உண்மையன்று. - 5. துவைதம் இதனைக் கண்டறிந்தவர் மாத்வாச்சாரியார். இவர் தென் கன்னட நாட்டில் உடுப்பி என்னும் சிற்றுாரில் பிறந் தவர். இவர் 18-ஆம் நூற்ருண்டினர் (1199-1378). இவர் இராமாநுசரைப்போலவே தனிப்பட்ட கடவுளிடம் கம்பிக்கை கொண்டவர். “கடவுள் வேதங்கள் துணையா லும் அறிய முடியாதவர். அவர் முடிவில்லாத அருளேயும் ஆற்றலையும் கொண்டவர். தனிப்பட்ட உயிர், உலகம், நேரம் எல்லாம் கடவுள் அருளால் இருப்பவை; அவர் அருள் இல்லாவிடில் அழிபவை. இவை யாவும் கடவுளுக் காகவே இருக்கின்றன. இவற்றின்மூலம் அவர் அடைவது ஒன்றுமில்லை' என்பது இவர் கருத்து. இவர் பிரமத்தில் பல பொருள்கள் இருக்கின்றன என்பர்; இறைவனும் உயிரும், இறைவனும் உலகமும், உயிரும் உலகமும், உயிரும் மற்ருேர் உயிரும், இறைவன் தனித்தும் மற்றவைகளுடன் கலந்தும் வாழலாம். உயிர்