பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை 131 களும் உலகமும் தனித்து இயங்கும் தன்மையற்றன. இறைவன் உயிரையும் பொருள்களையும் ஆண்டு வருபவனே தவிரப் படைக்கவோ, அழிக்கவோ இல்லை. இறைவன் இவற்றிற்குத் துணையாகவே விளங்குகிருன். இறைவன் எங்கும் பரந்துள்ளான். எனவே இறைவைேடு உயிர்கள் சார்ந்து இயங்குகின்றன. அணுவைப் போன்ற உயிரும், தனது அறிவுத் தன்மையால் உலகம் முழுவதும் பரந்திருக் கின்றது. இரண்டு உயிர்கள் ஒரே தன்மையுடையன என்று கூற மு' யாது. ஏனெனில் ஒவ்வொன்றின் அநுபவமும் வேறுபடுகின்றது. 6. சைவ சித்தாந்தம் சித்தாந்த சாத்திரங்கள் கி. பி. 400-600 என்னும் கால எல்லையில் செய்யப் பட்டது திருமந்திரம். அதன்கண் மூவாயிரம் பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிதறிக் காண்கின்றன. பின் வந்த அப்பர், சம்பந்தர் முதலியோர் பாடல்களிலும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிதறிக் காண்கின்றன. இக்கருத்துக்கள் அனைத்தையும் முறைப்படுத்திக் கூறுகின்ற சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதின்ைகு ஆகும். அவை கி. பி. 13, 18, 14-ஆம் நூற்ருண்டுகளில் செய்யப்பட்டவை. அவை (1) திருவுந்தியார், (3) திருக்களிற்றுப் படியார், (3) சிவ ஞான போதம், (4) சிவஞான சித்தியார், (5) இருபா, இருபஃது, (6) உண்மை விளக்கம், (?) சிவப்பிரகாசம், (8) திருவருட் பயன், (9) வி ைவெண்பா, (10) போற்றிப் பஃருெடை, (11) கொடிக்கவி, (18) நெஞ்சு விடுதூது, (18) உண்மைநெறி விளக்கம், (14) சங்கற்ப நிராகரணம் என்பன. இவற்றுள் தலைமணி, மெய்கண்டார்