பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 2. தமிழகக் கலைகள் இயற்றிய சிவஞான போதம். இப்பதினன்கு சாத்திரங்களின் சத்துப்பொருள்களே சைவ சமய சத்துவம் என்பது. கடவுள் உயிர்களுடன் அத்துவிதமாக நின்று அவைகட்கு வினேப் பயனை ஊட்டுவார். உயிர்கட்குப் பாசத்தொடர்பால் பிறப்பு இறப்பு நிகழும். உயிர் பரு வுடல், அறிகருவிகள், நுண்னுடல், பிராணவாயு முதலிய வற்றிற்கு வேருனது; தானே அறிவதன்றி, உணர்த்த உணர்வது; உடற் காரணங்கள் கூடி இருப்பினும், அவற். றிற்கு வேருய் கின்று அறிவது; பண்டைக்கால முதலே ஆணவமலத்தால் கட்டுண்டுகிடப்பது; புற-அகக்கருவிகளும் உயிரும், அரசும் அமைச்சும் போல்வன. அக்கருவிகள் உயிருக்குத் துனே செய்வன. இவை யாவும் தொழிற் படும் காலம் உயிருக்கு 'கனவு கிலே’ எனப்படும். இவற்றுள் சில குறைந்த காலம் உயிருக்குக் 'கனவுகிலே'; மேலும் சில குறைந்த கிலே ‘உறக்க கிலே’ எனப்படும். இவை யாவும் நீங்கி உயிர் தன்னிலையில் கின்றபோது பேருறக்க கிலே’ எனப்படும். உயிரின் அகங்காரமும் ஒடுங்கிய கிலே ' உயிர்ப்பு அடக்கம்' எனப்படும். கருவிகள் அறிவற்றன. ஆதலின் தம்மையும் அறியா; தமமைச் செலுத்தும் உயிரினேயும் அறியா. அவைபோல உயிர்களும் தம்மை யறியா; தம்மைச் செலுத்தும் இறை வனேயும் அறியா. சத்து என்றும் கேடின்றி விளங்கும் பொருள். எனவே இறை ஒன்றே அவ்விலக்கணத்துக்கு இலக்கியமாகும். ஆயினும், சைவ சித்தாந்தத்தில் முப்பொருள்களாகிய இறை, உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) என்பன என்றும் உள்ள பொருள்களாக ஒப்புக்கொள்ளப்பட்டவை. ஆகவே, இவை மூன்றும் சத்தேயாகும். உயிரும் உலகமும் விகாரம் அடைவதால் அசத்தாகல் பெறப்படும். இம்