பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை - 133 மூன்றினையும் வேறு பிரித்து அறிதற்கு இவை முறையே சிவ. சித்து, சத-சத்து சட-சத்து என்று பிரிக்கப்படும். சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் சிறப்பிலக்கண மாகும். அஃது அசத்தாகிய உலகத்தையும், சத்தாகிய பரம்பொருளையும் அறியவல்லது; அசத்தை விட்டுச் சத்தைப் பற்றக்கூடியது. உயிர்களின் தவத்தால் இறை வன் குருவடிவில் வந்து,பக்குவம் அடைவதற்கு ஞானத்தை உணர்த்தித் தன்பால் அவர்களேச் சேர்ப்பன். ஞானம் பெற்றவர் ஐந்தெழுத்து ஓதி ஞான நிலையைக் காப்பர். இவ்வாறு ஞானத்தைப் பேணும் உயிர்கள், இறை வன் தம்முடன் ஒற்றித்து கிற்றலால் பாசம் நீங்கப்பெறும். இறைவன் உயிர்களுக்குத் துணையாக கின்று சிவப்பேறு அல்லது முத்தி நிலையைக் காட்டுவான்; அதனேக் கானும் படி உதவியும் செய்வான். சீவன் முக்தர்கள் மலநீக்கக் கருத்துடையவராய், அடியார் இணக்கம் உடையவராய்ச் சிவ வேடத்தையும் சிவன் கோவிலையும் வழிபடும் நியமமும் உடையவராய் நிற்பர். சிவஞானபோதம் பன்னிரண்டு சூத்திரங்களில் கூறப்பட்டுள்ள பொருள் இதுவேயாகும்.