பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இலக்கியக் கலை இலக்கியம் சொற்களையும் வாக்கியங்களேயும் உண்டாக்கிப் பாடவும் பேசவும் அறிந்த மக்கள், எழுத்து முறையைக் கண்டறிந்த பின்பு, தாம் அதுவரையில் வாழையடி வாழையாக அறிந்து வைத்திருந்த சமுதாயக் கருத்துகளேயும், சமயக் கருத்துகளே யும் பாக்களில் வடித்தனர். காலம் செல்லச் செல்ல, அறிவு வளர வளர, மொழி வளம் பெற்றது. மொழியில் வல்ல அறிஞர்கள் மக்கள் படைத்த இலக்கியங்களையும் பேச்சு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு, மொழிக்கு இலக்கணம் வகுத்தனர். பின் வந்த புலவர்கள் அந்த இலக்கண அமைதிக்கேற்பத் தமிழர் பழக்க வழக்கங்களேயும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் குறிக்கும் செய்யுட் களேச் செய்தனர். செய்யுள் செய்யுள் என்பது ஏற்ற சில சொற்களால் பல பொருள்களே உள்ளடக்கிப் பொருத்தமான முறையில் செய்யப்படுவது. “ சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியில் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பம் சிறந்தன சூத்திரம்' என்பது கன்னூல் நூற்பா. செய்யுளின் இலக்கணமும் ஏறத்தாழ இதுவே என்னலாம்.