பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கலை 135 'பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல சொல்லால் பொருட்கிட கை வுணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்' என்பதும் காண்க. இலக்கியம் என்பது மக்களுக்கெல்லாம் பொதுவாகப் பயன்படும் பொருளே உடையதாய் இருத்தல் வேண்டும்; அத்துடன் இனிய வகையில் சொல்லப்படுவதாய் இருத்தல் வேண்டும். சொற்கட்குச் சிறந்த இன்பம் பயத்தலைக் குறிக்கோளாகப் பெற்றிருத்தல் வேண்டும்; "மக்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளே எடுத்துக் கூறும் செய்யுட்களோ, நூல்களோ, படிப்போரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவரது வாழ்க்கையையும் வளப்படுத்த வல்லனவாதல் வேண்டும். இவையே இலக்கியம் எனப்படும்.' அபிமன்யு கொல்லப்பட்ட அன்றிரவு அவனே கினேத்து அவன் தந்தையான அருச்சுனன் புலம்பும் பகுதியைப் படிப்பவர், தாமும் கண்ணிர்விட்டு அழுதலேப் பார்க்கின்ருேம். இறப்பு எல்லோர்க்கும் பொது. இறந்தது குறித்து புலம்புதலும் எல்லோர்க்கும் பொது. எனவே, இப்பகுதி அனேவர் உள்ளங்களையும் ஈர்க்கின்றது. வாழ்க்கை நிகழ்ச்சிகளே எவரும் கூறலாம். ஆயின், அவற்றைச் சாதாரண மனிதன் கூறுவதற்கும் இலக்கண இலக்கியம் கற்றுள்ள புலவன் கூறுவதற்கும் நிறைந்த வேறுபாடு உண்டு. சாதாரண மனிதன் கூறுவது எலும்புக் கூடு போன்றது. கற்றுவல்ல புலவன் கூறுவது "உயிருள்ள உடல் போன்றது. காப்புலமை வாய்ந்த புலவர் கலத்திறம் 1. Literature is thus fundamentally an expression of Life through the medium of Language.—An Introduction to the Study of Literature, Hudson, P. 11.