பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தமிழகக் கலைகள் பொருந்தப் பொருளை புகட்டுவதால் மட்டுமே 5ம் உணர்வு கவரப்படுகின்றது. இன்ன பொருளே, இன்னின்ன சொற் களால், இன்னின்னவாறு, இன்னின்ன காலத்தில் சொல்ல வேண்டும் என்பதை அப்பெருமக்கள் நன்கறிவார்கள். அவர்கள் செய்யும் செய்யுட்களோ நூல்களோ கற்பவர்கள் உள்ளத்தைப் பிணைக்கவல்லவை. இத்தகைய ஆற்றலால் இலக்கியம் கலே ஆகின்றது. இவ்வாறு சிறந்த முறையில் ஆக்கப்பெற்ற நூல்கள் ‘தலையாய இலக்கியங்கள்' என்று அறிஞரால் கருதப் பெறும். அப்பெருமக்களது செய்யுட் சிறப்பினை நன்கு உணர்ந்த கம்பர் பெருமான் பின்வருமாறு பாராட்டுதல் காண்க : “புவியினுக் கணியாய் ஆன்றது பொருள் தந்து புலத்திற் ருகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் ருெழுக்கமும் - - தழுவிச் சான்ருேர் கவியெனக் கிடங்த கோதா விரியினை வீரர் கண்டார்.” இலக்கியத் தோற்றம் . ஒரு சமுதாயத்தில் இலக்கியம் வெளிப்படுவதற்குக் காரணங்கள் யாவை? ஒருவருடன் ஒருவர் கலந்து வாழுதல் மக்கள் இயல்பு. அங்ங்னம் மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்தால்தான் பொருள் உணர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் உண்டாகும். மக்கள் தம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் பிறர்க்கு எடுத்துக்