பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கலை 137 காட்ட விழைதல் இயல்பாகும்; இங்ங்னம் எடுத்துக்காட்டி கேட்பவர் அவற்றை அறியும்பொழுது தம்மைப் போலவே உணர்தலும் எண்ணுதலும் செய்து செய்து மகிழ்வதைப் பார்ப்பதில் இன்பம் தோன்றுகிறதன்ருே? இவ்வாறு மக்கள் தம்மை வெளிப்படுத்துவதற்கு விரும்பும் விருப்ப மிகுதி இலக்கியத் தோற்றத்திற்கு ஒரு காரணமாகும். இம்முறையில் எழுந்தவையே அகப்பொருள், புறப்பொருள் பற்றிய பாடல்கள் என்னலாம். மக்கள் தம் கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூறு வதோடு, பிறர் எண்ணங்களையும் உணர்ச்சிகளேயும் அறிந்து கொள்வதில் விருப்பம் காட்டுகின்றனர்; அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கண்டு இன்புறுகின்றனர் அல்லது துன்புறுகின்றனர்; அவற்றைப் பிறருக்கு எடுத் துக்கூறி அவற்றின் படிப்பினையை உணர்த்துகின்றனர். இவற்ருல் அவர்க்குத் தம்மை யொழிந்த பிறரிடத்துள்ள பற்று நன்கு புலகுைம். இந்தப் பற்றே சிலப்பதிகாரம் முதலிய பெருங்காவியங்கள் எழுதக் காரணமாய் அமைந்தது. முற்றும் துறந்த இளங்கோ அடிகள் இவற்றின் காரணமாகவே சிலப்பதிகாரத்தை யாத்தனர் என்பது, “அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் ருவதுஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுறுத்துவங் தூட்டுமென் பதுஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுது மியாமோர் பாட்டுடைச் செய்யுள்' . என்று கூறியதைக் கொண்டு. உணரலாம். சிந்தாமணி, மணிமேகலை, பெரியபுராணம், இராமாயணம் முதலிய கதை நூல்கள் இம்முறை பற்றியே செய்யப்பெற்றவை.