பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழகக் கலைகள் மக்கள், துன்புறும் இவ்வுலக வாழ்க்கையைக் கண்டு கண்டு, இன்பம் காணும் முறையில் ஈடுபடுதலும் இலக்கியத் தோற்றத்திற்கு ஒரு கார்ணமாகும். இதல்ை தான், இல்லது-இனியது.நல்லது-புனேந்துரை' எனப் புலவரால் காட்டப்பெற்ற ஒழுக்கம் நான்கெனச் சான்ருேர் கூறியுள்ளனர். கோவை, கலம்பகம் போன்ற புனைந்துரை நூல்கள் இம்முறை பற்றி எழுந்தவையேயாகும். “உள்ளத்தைத் திறப்பதற்கும், அதைத் திருத்து வதற்கும், புரிந்துகொண்டு படிப்பதைச் செரிப்பதற்கும், தவறுகளேப் போக்கும் வன்மை உண்டாக்குவதற்கும், கல்லவற்றை மேற்கொள்வதற்கும், பிறர்க்கு எடுத்துரைப் பதற்கும், பிறரை நல்வழி படுத்துதற்கும் இலக்கியம் பயன்படல் வேண்டும். இங்கிலேயிற்ருன் அஃது இலக்கியம் எனப்படும்,' என்பது கார்டினல் நியூமன் என்பவரது கருத்தாகும். இவ்வாறு இலக்கியம் பல காரணங்களைக் கொண்டு தோன்றுகிறது. இவற்றுள் ஒழுங்கு, வரையறை, அழகு, பயன் ஆகியவை நிறைந்துள்ள இலக்கிய நூல்களே படிப்போர்க்கு இன்ப உணர்ச்சியை உண்டாக்கும். அவையே சமுதாயத்தின் அழியாத செல்வங்களாகும். கம் தமிழ் நூல்களுட் பல இத்தகைய அழியாத செல்வங் களாகும். அவற்றுள் தலைசிறந்தவை சங்க நூல்கள்; உள்ளதை உள்ளவாறு உரைப்பவை. தொகை நூல்கள் புறநானூறு, அகநானூறு, கற்றிணே, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை என்பவை சங்ககாலத் தொகை நூல்கள் எனப்