பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கலை $39. படும். இவற்றுள் பரிபாடல் என்பது, முருகன், திருமால், வையை பற்றிப் பலர் பாடிய பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாட்டிற்கும் சக்தம் உண்டு. திருமால், முருகன் ஆகிய கடவுளர் அலங்காரச் சிறப்பும், அக்கடவுளர் செய்த வீரச் செயல்களும், பிறவும் அடியார்க்கு அருளும் திறமும் பொருள்பொதிந்த சொற்களால்பேசப்பட்டுள்ளன. வையை யாற்றில் புதுவெள்ளம் வருதல், அவ் வெள்ளம் வயல்கள் முதலிய பல இடங்களிலும் பரவுதல், அவற்ருல் உழவர் முதலியோர் மகிழ்வுறுதல்,நகர மக்கள் புதுநீராடப் போதல், அவர்தம் கிலேகள், அவர்கள் ரோடுதல், வையைப் பெருக் சிற்கு வணக்கம் தெரிவிக்கும் முறை, ஆற்றங்கரை யில் நிகழும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முதலிய வையை பற்றிய பாடல்கள் அழகொழுக எழுதப்பட்டுள்ளன. பண்டைப் புலவர் பெருமக்கள் கடவுளர் தம் அலங்கார வகைகளேயும், பொதுமக்கள் பக்தி நிறைந்த உள்ளத்தோடு கோவிலுக்கு வருதலையும், அக்கடவுளரை வழிபடுதலேயும், இவ்வாறே வையையில் புதுவெள்ளம் வருதலையும், பொது மக்கள் மகிழ்ச்சியோடு நீராடி ஆடல் பாடல்கள் கிகழ்த்து கலேயும் தம் விழியாரக் கண்டு கண்டு மகிழ்ந்தவர்; அக் காட்சிகளே கினேவிற் கொண்டும், தாம் படித்த நூல்களின் அணேயைக் கொண்டும்.தமது கற்பனைத் திறனும் புலமைத் திறனும் புலப்பட இப் பாடல்களைப் பாடினர். எனவே, இப் பாடல்கள் இலக்கியக் கல்வளம் செறிந்து விளங்கு. கின்றன. . . - - அகப்பொருள் நூல்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு. என்பவை, இல்லறம் நல்லறமாக நடத்தக்கூடிய உள்ளம் ஒன்றுபட்ட தலமக்களது அக வாழ்வைச் சித்தரித்துக் கூறுவன. இவ்வக வாழ்வு குறிஞ்சி, பாலே, முல்லை, மருதம்,