பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழகக் கலைகள் நெய்தல் என்னும் ஐந்து ஒழுக்கங்களாக நிகழ்கின்றது என்று, புலவர்கள் இவற்றுக்கு குறிஞ்சி முதலிய ஐந்து திணைகளை ஒப்பிட்டுப் பாடியுள்ள திறம் சிறந்த கலைத் திற னைத் தன்னகத்தே கொண்டுள்ளதாகும். ஒவ்வொரு கிலத்திற்கும் உரிய மரம் செடி கொடிகள், பறவைகள், பெரும் பொழுது, சிறு பொழுது, பறை, பண், தொழில்கள் முதலியவற்றை முறைப்படுத்தி, அவ்வொழுக்கத்தை விளக்கும் பாடல்கள் அவ்வத்தினேக்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பவை பொருந்தப் பாடி யுள்ள திறனைக் கலைத்திறன் என்று சொல்லலாம். சங்கப் புலவர் பாடல்களைப் படித்துப் படித்து அறிந்து மகிழ்பவரே அவர்தம் கலத்திறனே நன்கு உணர முடியும். கலித்தொகையில் சிறந்த கலைமக்களது அகவொழுக் கமும் இழிந்தோர் அகவொழுக்கமும் கலந்து பேசப்படு: கின்றன. இழிந்தோர் பற்றிய பாடல்களில் இழிந்தோர்க் குரிய பண்புகளையும், அவர்கள் வழங்கும் உவமைகளையும் சொற்ருெடர்களையும் கருத்துக்களையும் வைத்துப் பாடியி ருத்தல், சங்கப் புலவர் தம் கலைத்திறனேயும், பரந்த உலக அறிவையும் நன்கு விளக்குகின்றது. இலக்கியக் கலைக்கு இவ்வகப் பொருள் நூல்கள் சிறந்த எடுத்துக்காட்டு என் னலாம். தமிழன், போரை வெட்சி முதலிய பல திணைகளாகப் பிரித்தான்; ஒவ்வொரு திணைக்கும் பல துறைகளே அமைத் தான். ஒவ்வொரு துறையும் போர் முயற்சியின் ஒரு படி யாகும். இங்ங்னம் போர் முறைகளுக்கு இலக்கணம் வகுத்த தமிழன்,போருக்கு அப்பாற்பட்ட செயல்களுக்கும் பல பகுதிகளை வகுத்தான். இவை அனைத்தையும் தொல்காப்பியம் - புறத்திணை இயலிலும், புறப்பொருள் வெண்பா மாலையிலும் விரிவாகக் காணலாம். இத்திணே களுக்கும், துறைகளுக்கும் உரிய பாடல்களைப் புறநானூறு,