பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கலை 14 to . பதிற்றுப்பத்து என்னும் இரண்டு நூல்களிலும் படித்து மகிழலாம். ஒவ்வொரு பாட்டின் அடியிலும், இஃது: இன்ன திணை - இன்ன துறை' என்று பண்டைப் புலவர்கள் எழுதி வைத்துள்ளார்கள். திணையும் துறையும் பற்றிப் பேசும் இலக்கணத்திற்குரிய எடுத்துக்காட்டாக ஒவ்வொரு. பாடலும் அமைந்திருப்பது படித்து உணர்ந்து மகிழற் குரியது. மிகச் சிறந்த கலேயுணர்வு உடைய புலவர் பெரு. மக்களால்தாம் இத்தகைய பாடல்களைப் பாடுதல் இயலும். திருக்குறள் திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பொருள்களையும் விரித்துப் பேசுவது; இடையிடையே வீடு பேற்றையும் குறிப்பது; வாழ்க்கைக்குத் தேவையான ஒவ் வொரு விழுமிய கருத்தையும் குறட்பாவில் தெரிவிப்பது. குறட்பா இரண்டு அடிகளேக் கொண்டது; ஏழு சீர்களே உடையது. ஒரு சிறந்த கருத்தை ஏழு சீர்களால் ஒன்றே முக்கால் அடியில் அமைத்தல் எளிதான செயலா? ஒரு குறளில் ஒரு சொல்லே நீக்கி காம வேருெரு சொல்ல அமைத்தால், அக்குறளின் பொருள் அமைதியும் சொல்லமைதியும் கெட்டு விடுதல் காண்கிருேம், இங்ங்னம் பிறர் கை வைக்க முடியாதபடி, சிறந்த சொற்களே அமைத்து அவற்ருல் விழுமிய கருத்தை விளக்குவது சிறந்த கலையாற்றல் அன்ருே? இத்தகைய கலே ஆற்றலைத் திருக்குறளில் கண்டு கண்டு சுவைக்கலாம். சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் தமிழ்க் காவியங்களுள் தலே சிறந்தது: என்று அனைவரும் போற்றுதற்கு, அதன் கண் அமைந்துள்ள கலே ஆற்றலே சிறந்த காரணமாகும். அது மனிதவாழ் வைச் சித்தரித்துக் கூறும் பேரிலக்கியம்; மனிதனுடைய