பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழகக் கலைகள் நல்லியல்புகளையும், தீய இயல்புகளையும் படம் பிடித்துக் காட்டுவது; ஒன்பது சுவைகளையும் திறம்பட எடுத்துக் கூறுவது; தமிழகத்தின் ஐவகை நிலங்களையும் அவற்றின் இயல்புகளேயும் விரித்துக் கூறுவது; மொழிப்பற்று-இனப் - பற்று.நாட்டுப்பற்று என்பவற்றை உயிர் காடியாகக் கொண்டு இருப்பது; விருப்பு வெறுப்பு இன்றிச் சேர,சோழ, பாண்டியர் மூவரையும் ஒன்று போலவே பாராட்டுவது. இத்தகைய பண்புகளோடு விழுமிய சொற்களால் யாக்கப் பெற்ற அகவற்பாக்களையும் வெண்பாக்களையும் தன்ன கத்தே பெற்றிருப்பது; பல கருத்துக்கள் அலைமோதும் உள்ளத்திற்குச் சிறந்த அறிவுரையை இறுதியில் அளித்து நிற்பது. இத்தகயை உயர்ந்த பண்புகளால் சிலப்பதிகாரம் என்னும் காவியம் தலைசிறந்த இலக்கியக் கலை நூ லாய்க் காட்சியளிக்கிறது. முடிவுரை - இவ்வாறே பின்தோன்றிய நூல்களான சிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் என்பன சிறந்த இலக் கியங்கள் என்னலாம். சைவத் திருமுறைகள் பன்னிரண் டும், ஆழ்வார் அருட்பாடல்களும் சமய இலக்கியம்; பதி ன்ைகு சாத்திரங்கள் முதலியன தத்துவ இலக்கியம். பரணி, கலம்பகம், உலா, அந்தாதி, பிள்ளைத்தமிழ், குறம் முதலிய சிறு நூல்கள் புலவர்தம் இலக்கியக் கலையாற்றலே நன்முறையில் வெளிப்படுத்துவனவாகும். இங்ங்னமே. இலக்கியப் பண்புகள் அமைந்த இக்காலக் கதை நூல்கள், கவிதைகள், நாடக நூல்கள் முதலியனவும் இலக்கிய அரங்கில் இடம்பெறும். இவற்றையெல்லாம் இலக்கியக்கலை உணர்வோடு படித்து இன்புறுதலே தமிழர் கடமையாகும். -ബ=