இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழகக் கலைகள் 1. ಸಿಂಹಸr கலை’ என்பது யாது ? மனிதனது உள்ளத்தைத் தன் வயமாக்கி, கிரம்பி, அவ்வளவோடு கில்லாமல் வெளிப்படும் ஆற்றலே கலை எ ன் பது. கூடுதல், குறைதல் இன்றி எப்பொருளும் அள வோடு அமைந்திருப்பின், அந்த அமைப்புக் கண்ணைக் கவருவது இயல்பு. கண்ணேயும் கருத்தையும் கவரும் அந்த அமைப்புப் பாராட்டத்தகும் கிலேயை அடை கின்றது. அப்பொருள் கலையறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் பாராட்டுகின்ருேம். எனவே, கலை என்பது அளவும் பொருத்தமும் தன்னுள் அடக்கி நிற்பது; அதே சமயத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது; உள்ளத் தைத் தன்பால் ஈர்ப்பது. கலையாற்றல் உள்ளத்தை ஈர்க்கும் காவியமாக வெளிப்படலாம்; கண்ணக் கவரும் ஓவியமாக வெளிப் படலாம்; சிற்பமாக உருக்கொள்ளலாம்; கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்க்கும் அழகிய கட்டடமாக வெளிப்படலாம்; பிறவாகவும் தோன்றிக் காட்சி அளிக்க லாம். - . 1.