பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தமிழகக் கலைகள் கலையின் படைப்புக்கள் காகரீகத் தொடக்கத்தில் தவழத் தொடங்கிய பழைய கற்கால மனிதன், தான் வாழ்ந்த மலைக்குகையில் இருந்த பாறைகள் மீது தன் கைவண்ணத்தைக் காட்டி ன்ை. அக் கைவண்ணம் சில ஒவியங்களாக இன்றளவும் காட்சி அளிக்கிறது. அவனது உள்ளத்திலிருந்து டொங்கி எழுந்த கலை உணர்வே அவனே ஒவியப் புலவனுக்கியது. சிறிய கத்தியைக் கொண்டு சிறிதளவு மரப்பட்டையைச் சிவி, அச்சிவப்பெற்ற இடத்தில் அழகிய பிள்ளையார் உருவத்தைக் கல்லாக் களிமகன் அமைக்கின்ருன். அவனது உள்ளத்திலிருந்து பொங்கி எழும் கலே ஆற்றலே. அவன் கை வழியாகப் புகுந்து அவ்வழகிய சிற்பத்தை அமைக் கின்றது. அறுபத்து நான்கு கலேகள் இவ்வாறு மனிதனுள் இருக்கும் கலை ஆற்றலே உலகத்தார் வியக்கும் சித்தன்ன வாசல் ஒவியங்களையும், தஞ்சைப் பெரிய கோவில் ஒவியங்களையும் உண்டாக் கியது; கிரேக்க நாட்டுச் சிற்பங்களையும், காந்தாரச் சிற்பங்களையும், கண்ணேயும் கருத்தையும் கவரும் தென் னிந்தியச் சிற்பங்களேயும், சாஞ்சி, அமராவதி முதலிய இடங்களில் உள்ள பெளத்த சிற்பங்களையும் படைத்தது; விழித்த கண் விழித்தபடி பார்க்கத்தக்க பேரெழில் படைத்த தாஜ்மஹால் என்னும் கவினுறு கட்டடத்தை உண்டாக்கியது; மனத்திற்கு இன்பத்தை ஊட்டும் மலர்ச் சோலைகளேயும், பூங்காக்களேயும் அமைக்கின்றது; உலக அதிசயங்கள்' என்று சொல்லத்தகும் அரிய படைப்புக் களப் படைத்தது. அம்மம்ம கலையாற்றலின் திறத்தை உள்ளவாறு எடுத்துக் கூறுவது அரிதினும் அரிது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/17&oldid=862942" இலிருந்து மீள்விக்கப்பட்டது