பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகள் 3 சிறந்த சொற்பொழிவாளன் தான் பேச விரும்பும் பொருளைக் கேட்போர் எளிதில் புரிந்து பயன் பெறும் வகையில் முறைப்படுத்தி, இடத்திற்கு ஏற்ப, குரலேத் தாழ்த்தியும் உயர்த்தியும் சமப்படுத்தியும், பொருளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் காட்டியும் அளந்து பேசில்ை, அவன் சிறந்த பேச்சாளன்' என்று பாராட்டப்படுவான். 'அவன் கலையறிவோடு பேசினன்' என்று அறிஞர் அவனைப் பாராட்டுவர். இதனைப் பேச்சுக்கலை என்று சொல்லலாம். இவ்வாறு ஒவ்வொரு செயலும் நெறி தவருமல், முறை தவருமல், செம்மையாகச் செய்யப்படுமாயின், கலைத் தன்மையை அடைகின்றது என்பது அறிஞர் கருத்து. பேச்சு முதலிய ஒவ்வொன்றிலும் கலை உணர்வைக் கண்ட கம் முன்னேர், கலையை அறுபத்து நான்கு வகையாகப் பிரித்தனர். வடமொழியில் காம சூத்திரத்தை எழுதிய வாத்ஸ்யா யனர் அறுபத்து நான்கு கலைகளின் பெயர்களேக் குறிப் பிட்டுள்ளார். புத்தர் வரலாற்றைக் கூறும் லலித விஸ்தரம் என்னும் நூலிலும், சமண நூல்களிலும், இந்து நூல் களிலும் அறுபத்து நான்கு கலைகளின் பெயர்கள் காணப் படுகின்றன. சமணர் நூல்களில் ஆடவர் கலைகள் எழுபத்திரண்டு என்றும், பெண்களுக்குரிய கலைகள் அறுபத்து நான்கு என்றும் கூறப்பட்டுள்ளன. - 1. ஆடல், 3. பாடல், 8. இசைக் கருவிகள், 4. வீணை, தமரு-வாத்தியம், 5. ஒவியம், 6. கவிதை, ?. நிகண்டு, 8. யாப்பு, 9. அணி இலக்கணம், 10. நாடகம் ஆடுதல், 11. செய்யுளின் ஒரடியைக் கொண்டு மற்ற அடிகளை நிரப்பிப் புதிய செய்யுள் செய்தல், 13. போட் டியில் ஒருவர் சொல்லும் செய்யுளின் இறுதி எழுத்தில் தொடங்கும் வேருெரு செய்யுளைச் சொல்லுதல், 18. புதிர் போல் அமைந்த பாக்களைச் செய்தல், 14. எளிதில் ஒலிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/18&oldid=862944" இலிருந்து மீள்விக்கப்பட்டது