பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகள் - 7 பலரைப் போல நடித்துக் காட்டுதல், கனவுக்குப் பொருள் கூறுதல், மெழுகு வேலை, துணிகளுக்குச் சாயம்தோய்த்தல், அரசியல், பொருளாதாரம், ஊர்களே அமைப்பது, கலப் பிட்ட பொருள்களில் கலப்பைக் கண்டுபிடித்தல், எண்ணிய வற்றை முடிப்பது, நெல் முதலிய தானியங்களின் இலக் கணத்தை அறிதல், வேலையாட்களே இன்புறுத்தி வேலே வாங்குதல், மக்களின் உள்ளத்தைக் கவருவது, உயர்க் தோரிடம் பணி செய்யும் திறமை, வீட்டு மரியாதைகள் , ஒழுக்கங்கள் அறிதல், நீரோட்டமுள்ள இடங்களேக் கண்டறிதல், உலக இயல்பை அறிதல் என்பனவும் இவை போல்வன பிறவும் கலைகள் என்று சுட்டப்பட்டுள்ளன.” கலைஞன் இலக்கணம் கலைஞன் இயற்கை அமைப்புக்களேக் கூர்ந்து கவனித் தறிதல் வேண்டும்; பொருள்களின் பல்வேறு இயல்புகளே யும் அவற்றுக்கேற்ப பொருத்தத்தையும் நன்கு தெளிதல் வேண்டும்; தன் கினேவில் தோன்றுவனவற்றைக் காவிய மாகவோ ஒவியமாகவோ, சிற்பமாகவோ, வேருென்ரு கவோ வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருத்தல் வேண்டும். கலையின் பொருளையும், வாழ்க்கை முறையையும் நன்கு அறிந்து தெரிந்திருத்தல் வேண்டும்; கலைஞன் சிறந்த ஒழுக்கம் பெற்றிருத்தல் வேண்டும். இவை அனைத்தும் ஒருசேரப் பெற்றவனே சிறந்த கலைஞன் ஆவான். 3. தமிழ்க்கலைக் களஞ்சியம், III, பக். 340. 4. டிெ பக். 341.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/22&oldid=862952" இலிருந்து மீள்விக்கப்பட்டது